ஏழைகளுக்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்கிய பில்லியனர்: யார் தெரியுமா?

Report Print Kabilan in தொழிலதிபர்

உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஏழைகளுக்கு உதவ 2 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ், கடந்த 2017ஆம் ஆண்டு, அவசர தேவை மற்றும் நீண்ட காலத்திற்கு அதன் நன்மை நீடிக்கும் படியான யோசனைகளை வழங்க வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தனது சொத்துகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக பெருமளவு தொகை, பொதுமக்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தப்படும் என பெசோஸ் அறிவித்தார்.

அதன்படி, சுமார் 2 பில்லியன் டொலர்கள் ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படும் என ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அறக்கட்டளை மூலமாக 2 பில்லியன் டொலர்கள் வீடு இல்லாத குடும்பங்களுக்கும், குறைந்த வருவாய் உள்ளோரது குழந்தைகள் படிக்க மழலையர் பள்ளிகள் தொடங்கவும் பயன்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ‘Bezos Day One Fund' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை பெசோஸ் துவங்கியுள்ளார். அவர் தனக்கு கிடைத்த பதில்கள், யோசனைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், கருத்து தெரிவித்தவர்களை பாராட்டுவதாகவும் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இந்த நலத்திட்டங்களை தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

AFP/Getty Images

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers