தொழில்நுட்ப உலகின் பில்லியனர்கள்: வைத்திருக்கும் விலையுயர்ந்த சொத்துக்கள் எவை தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழிலதிபர்

சமகாலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் என்ற இடத்தினை குறுகிய காலத்தில் பெற்றவர்கள் தொழில்நுட்ப உலகில் இருப்பவர்களாவார்.

இவர்கள் வைத்திருக்கும் அதி விலையுயர்ந்த சொத்துக்கள் அல்லது பொருட்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Larry Ellison

இவர் ஒராகிள் நிறுவத்தினை உருவாக்கியவராவார். 2012 ஆம் ஆண்டில் சுமார் 300 பில்லியன் டொலர்கள் செலவழித்து ஹவாயிலுள்ள Lanai எனும் ஒரு தீவை தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.

Elon Musk

பிரபல தொழிலிநுட்ப தொழிலதிபராக திகழும் இவர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவது போல ஒரு நீர் மூழ்கி காரை வைத்திருக்கின்றார். இதனை ஒரு மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்துள்ளார்.

Carlos Slim

மெக்ஸிகனை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் முதலீட்டாளராகவும் இருக்கும் இவர் கலைநயம் பொருந்திய சித்திரங்களை சேகரிப்பதில் ஆர்வம் உடையவர். இதற்காக 800 மில்லியன் டொலர்கள் செலவு செய்து ஒரு மியூசியத்தையே உருவாக்கியுள்ளார். இங்கு 65,000 வரையான சித்திரவேலைப்பாடுகளின் சேகரிப்புக்கள் காணப்படுகின்றன.

Mark Zuckerberg

இவரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு பேஸ்புக் ஆனது பட்டி தொட்டியெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறான பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக திகழும் இவர் 100 மில்லியன் டொலர்கள் செலவில் இரு பெரு நிலப்பரப்புக்களை கொள்வனவு செய்துள்ளார்.

இதில் ஒன்று 393 ஏக்கர்கள் பரப்பளவுள்ள பீச் பகுதியும், மற்றையது 357 ஏக்கர் பரப்பளவுள்ள கரும்பு தோட்டமும் ஆகும்.

Larry Page

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவுனராக காணப்படும் இவர் 45 மில்லியன் டொலர்கள் செலவில் ஆடம்பர படகு ஒன்றினை தன்வசமாக்கியுள்ளார். இதில் ஹெலிபேட் உட்பட இன்னும் ஏராளமான வசதிகள் உள்ளன.

Mukesh Ambani

ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய பணக்காரராக திகழும் இவர் ஒரு பில்லியன் டொலர் செலவில் பாரிய வீடு ஒன்றினை கட்டியுள்ளார். 27 மாடிகளைக் கொண்ட இந்த வீட்டின் மொத்த பரப்பளவு 400,000 சதுர அடிகள் ஆகும். இங்கு 3 ஹெலிபேட்கள், 6 நிலக்கீழ் வாகனத்தரிப்பிடங்கள் மற்றும் 9 லிப்ட் உட்பட மேலும் ஏராளமான வசதிகள் காணப்படுகின்றன.

Bill Gates

தற்போதைய தொழில்நுட்ப உலகிற்கு அடித்தளமிட்டவர்களில் இவரும் ஒருவராவார். அத்துடன் உலகின் இரண்டாவது பணக்காரராகவும் திகழ்பவர். இவர் டாவின்சியின் 72 பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் பிரதியை 30 மில்லியன் டொலர்களுக்கு 1994 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டிற்குரிய இவ் ஆவணத்தில் பல வரைபடங்கள், எழுத்துக்கள் மற்றும் ஓவியங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

Sergey Brin

கூகுளின் மற்றுமொரு துணை நிறுவுனரான இவர் 2011 ஆம் ஆண்டில் 80 மில்லியன் டொலர்களுக்கு Dragonfly எனும் ஆடம்பர படகு ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இதில் திரையரங்கம் கூட காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

Steve Ballmer

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுனராக விளங்கும் இவர் Los Angeles Clippers எனும் கூடைப்பந்து அணியை வாங்கியுள்ளார். 2014 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த அணியின் பெறுமதி 2 பில்லியன் டொலர்கள் ஆகும்.

Michael Dell

டெல் நிறுவனத்தின் நிறுவுனரான இவர் 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியில் நியூயோர்க்கில் ஒரு தொடர்மாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். இது 10,923 சதுர அடிகள் பரப்பளவு உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers