கோடிகளில் வருமானம்.. இந்த வயதிலும் சாதனை படைத்த மாதவன்

Report Print Fathima Fathima in தொழிலதிபர்

55 வயதில் தொழில் தொடங்கி தன்னாலும் சாதிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தொழிலதிபரான மாதவன்.

பெங்களூரில் வசதி குறைவான குடும்பத்தில் பிறந்தவரான மாதவன், 30 ஆண்டுகளாக பிரபல மெத்தை நிறுவனமான Kurl-On ல் பணியாற்றி வந்தார்.

தொடக்கத்தில் 650 ரூபாயை சம்பளமாக பெற்றவர், அயராத உழைப்பு திறமையின் விளைவால் லட்சங்களை சம்பளமாக பெறும் அளவுக்கு உயர்ந்தவர்.

இந்த நிர்வாக திறனே அவருக்கு புதிய உந்து சக்தியை கொடுத்தது, 55 வயதில் Kurl-On நிறுவனத்தில் இருந்து விலக முடிவெடுத்தார்.

இதற்கு காரணம் பல ஆண்டுகளாக மாதவனுக்கு பழக்கமாகி இருந்த சங்கர் ராம், 2005ம் ஆண்டு கோவையில் நலிவடைந்த நிறுவனம் விலைக்கு வருவதாக மாதவனுக்கு தெரிவித்ததும் இவர் தான்.

ஆரம்பத்தில் சற்று தயங்கிய மாதவன், 40 லட்ச ரூபாய் முதலீடு செய்து சங்கர் ராமுடன் இணைந்து கொண்டாராம்.

அந்நேரத்தில் வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே ஸ்பிரிங்க் மெத்தைகளின் ஆதிக்கம் இருந்துள்ளது, எனவே தங்களுக்காக சந்தை காத்திருப்பதாகவே எண்ணியவர்கள் அயராது உழைக்கத் தொடங்கினர்.

குடும்பத்திலும் அவருக்கு நிறைய பொறுப்புகள் இருந்தன, இருப்பினும் மனைவியின் நம்பிக்கையான பேச்சினால் சொந்த தொழில் தொடங்க முடிவெடுத்து அடியெடுத்து வைத்தார்.

”சரியான திட்டமிடல் இருந்தாலும் எதுவும் ரிஸ்க் இல்லை” என கூறும் மாதவனுக்கு மனைவியின் வார்த்தைகள் நம்பிக்கையை மேலும் அதிகரித்தன.

தற்போது 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பெப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார்.

குறிப்பாக இந்திய ஸ்பிரிங்க் மெத்தை தயாரிப்பில் 56 சதவிகித சந்தையை கைப்பற்றி இருக்கிறது அவரது நிறுவனம்.

தற்போதைய சூழலில் அவரது நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1500 கோடி ரூபாயாகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers