உலகின் மரியாதைக்குரிய CEO எனும் தகுதியை இழக்கின்றார் சுந்தர் பிச்சை

Report Print Givitharan Givitharan in தொழிலதிபர்

இந்தியாவின் தமிழகத்தில் பிறந்த அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளிற்கு CEO ஆகி உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் சுந்தர் பிச்சை.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு உலகின் மரியாதைக்குரிய CEO எனும் அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

எனினும் இப் பட்டம் வழங்கி 12 மாதங்கள் ஆகும் முன்பே அதற்கான தகுதியை இழக்கின்றார் என்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதாவது Forbes மற்றும் Reputation Institute ஆகியவை ஆண்டு தோறும் உலகில் முதல் 10 இடங்களை பிடிக்கும் CEO தொடர்பான தகவல்களை வெளியிடுவது வழக்கமாகும்.

கடந்த வருடம் இப் பத்து இடங்களுக்குள் காணப்பட்ட சுந்தர்ப்பிச்சை இந்த வருடம் குறித்த 10 இடங்களுக்குள் வரவில்லை.

இதன் காரணமாக இவ் வருடம் வெளிவரவுள்ள உலகின் மரியாதைக்குரிய முதல் 10 CEO வரிசையில் சுந்தர் பிச்சை இடம்பெறமாட்டார் என்பது உலகத்தமிழர்களுக்கு சற்று அதிர்ச்சியான செய்தியாகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers