சரவணபவன் ராஜகோபாலின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஊழியர்கள்... நெஞ்சை உருக்கும் தகவல்

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த சரவணன் ராஜகோபால் அண்ணாச்சியின் கடைசி ஆசையை அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ராஜகோபால் தோல்வியை சந்தித்தாலும், தன்னுடைய தொழில் விவகாரத்தில் ஒரு கிங் மேக்கராகவே இருந்து வந்திருக்கிறார்.

தனி மனிதன் இவ்வளவு பெரிய உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார் என்றால் அது அவ்வளவு எளிதல்ல, இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் இருக்கின்றனர்.

அப்படி அவர் கஷ்டப்பட்டதன் காரணமாகத் தான் உலகெங்கும் சரவண்பவன் என்ற ஹோட்டல் கிளைகள் தென்படுகின்றன. அந்தளவிற்கு உழைப்பில் கெட்டிக்காரர்.

இவருக்கு முருகன் என்றால் அவ்வளவு பிடிக்கும், அதன் காரணமாக தான் சரவண பவன் என்றே தன்னுடைய ஹோட்டல்களுக்கு பெயரை வைத்தார். எந்தளவிற்கு கடவுள் அவரை உயரத்திற்கு கொண்டு சென்றாரோ அதே அளவிற்கு அவரை கடவுள் கீழே இறக்கிவிட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

கடவுள் மீது கொண்ட பக்தியால், தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் நவதிருப்பதி என்கிற பிரமாண்ட கோவிலைஇவர் உருவாக்கியுள்ளார்.

இப்படி கடவுள் முருகன் மீது அதிக பக்தி கொண்ட இவருக்கு என்று கடைசி ஆசை ஒன்று இருந்துள்ளது. இது குறித்து அவர் தன் குடும்பத்தினரிடம், தான் இறந்துவிட்டால்கூட, அதாவது இறந்த தினத்தன்று கூட, சரவண பவன் ஹோட்டல்களை திறந்தே வைத்திருக்க வேண்டும், இது தான் என்னுடைய கடைசி ஆசை என்று கூறியுள்ளார்.

அதன் படியே இன்று அவர் இறந்த போதும், வழக்கம் போல் சரவண பவன் ஹோட்டல் கிளைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குப் பின்னர் தான் மூடப்படும் என்றும் ஹோட்டல் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த உடல் வீட்டில் கிடந்தாலும், அவரது ஆசைப்படி எல்லா ஹோட்டல்களையும் திறந்து வைத்து அவரது குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்