சரவணபவன் ராஜகோபால் மரணம் நிகழ்ந்தது எப்படி? திடீரென்று வந்த புகார்: நடக்கப்போவது என்ன?

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சரவணபவன் மரணம் குறித்து விசாரிக்க புகார் அளிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நீதிமன்ற காவலில் இருந்தபோது மரணம் நிகழ்ந்திருப்பதால் புழல் சிறைத் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், ராஜகோபால் நீதிமன்ற காவலில் இருந்த போது மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் பிரிவு 176 விதியின் படி விசாரணை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் புகார் மனுவை பெற்றுக்கொண்ட புழல் காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் இந்த மரணம் தொடர்பாக விசாரணை செய்வார் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையின் உள்ள ராஜகோபாலின் சடலம் சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்