கடைசி வரை அதை படித்து பார்க்காமலே இறந்து போன சரவணபவன் ராஜகோபால்... வெளியான தகவல்

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் உடல்நிலை சரியில்லாமல் இறந்த சரவணபவன் ராஜாகோபால் கடைசி வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்து பார்க்காமலே இறந்துவிட்டார்.

தன்னுடைய தரமான உணவின் மூலம் சரவண்பவன் என்ற ஹோட்டலை, தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் பல கிளைகளை உருவாக்கி, ஒரு மிகப் பெரிய தொழிலபதிராக வலம் வந்த சரவணபவன் ராஜாகோபால், ஜீவஜோதி என்ற திருமணம் ஆன பெண்ணின் மீது ஆசைப்பட்டு, கடைசியில் அவரின் கணவரை கொலை செய்யும் அளவிற்கு சென்று, இறுதியில் ஆயுள் தண்டனை கைதியாக அறிவிக்கப்பட்டார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான அண்ணாச்சி, படுக்கை படுக்கையாகி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனக்கு உயர் நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து, ராஜகோபால், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் 29-ஆம் தேதி அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் ஆதங்கப்பட்டார்.

இதனால் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஹிந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் தெலுங்கும், கன்னடமும் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி இடம்பெறாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்நிலையில் தான், முதல் முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழ் மொழியில் உச்சநீதிமன்றம் மொழிபெயர்த்துள்ளது.

அதில் முதல் தீர்ப்பே சரவணபவன் ராஜகோபாலின் தீர்ப்புதான். இணையதளத்தில் வெளியாகியுள்ள தீர்ப்பை அவர் படித்து பார்க்காமலேயே மறைந்துவிட்டார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்