சரவணபவன் ராஜகோபாலின் இறுதிச்சடங்கு எங்கு நடக்கிறது தெரியுமா? இவ்வளவு பெரிய தொழிலதிபரானதின் ரகசியம்

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் பெண் சபலத்தால், சரிந்தாலும், தன்னுடைய தொழிலில் எப்போதும் கெட்டியாக இருக்கும் சரவணபவன் ராஜகோபால் இந்தளவிற்கு உயர்ந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருப்பவரும் ராஜகோபாலை அண்ணாச்சி என்றே தான் அழைப்பர்.

அப்படி மக்களின் பாசத்தால் அண்ணாச்சி என்று அழைக்கப்படும், ராஜகோபாலின் சொந்த ஊர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள புன்னைநகர் என்னும் ஊர் தான், இவரது முதல் மனைவி பெயர் வள்ளியம்மாள்.

2-வது மனைவியின் பெயர் கிருத்திகா. ஷிவகுமார், சரவணன் என்ற இரு மகன்கள் இவருக்கு உள்ளனர்.

1981-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் திகதி சென்னை கே.கே.நகரில் சரவணபவன் எனும் பெயரில் சிறிய ஹோட்டல் ஒன்றை துவங்கினார். அதன் பின்னர் தனது கடும் உழைப்பால் படிப்படியாக வளர்ச்சி அடைந்தார்.

அப்போது இருந்த காலகட்டத்தில், ஹோட்டல்களில் தட்டுகளில் தான் உணவுகள் பரிமாறப்பட்டு வந்தது. ஆனால் அதை எல்லாம் உடைக்கும் வகையில் அண்ணாச்சி, தனது ஹோட்டலில் தட்டில் வாழை இலை வைத்து சாப்பாடு பரிமாற செய்தார்.

இதுவே வாடிக்கையாளர்களை இழுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என அனைத்தும் வீட்டு சாப்பாடு சுவையில் கிடைத்ததால், சரவணபவன் ஹோட்டல் என்றால் நம்பி சாப்பிடலாம், சுவை அவ்வளவு அருமையாக இருக்கும் என்று மக்கள் ஆஹா, ஓகோ என்று பாராட்டி தள்ளினர்.

இதன் பின்னரே படிப்படியாக சென்னை உட்பட பல மாவட்டங்கள் தன்னுடைய கிளைகளை பெரிதாக்கினார். தமிழகத்தில் மட்டும் இருக்கக்கூடாது என்று வெளிநாடுகளிலும் தன்னுடைய கிளைகளை பெரிதாக்கி சாதனை படைத்தார்.

இப்படி தொழிலில் சாதனை படைத்த ராஜகோபால், பெண் மீது கொண்ட ஆசையால் கடைசியில் கொலையாளியாக மாற்றப்பட்டார்.

இறந்த ராஜகோபாலின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற வேண்டியது. ஆனால் இரவு 8 மணி வரை மாஜிஸ்திரேட்டு வராததால், பிரேத பரிசோதனை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் இன்று பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் சென்னை கே.கே.நகரில் இருக்கும் அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புன்னைநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்