லட்சக்கணக்கில் சம்பளத்தை விட்டு தேநீர் விற்க வந்த நண்பர்கள்! அவர்களின் நிலை என்ன தெரியுமா?

Report Print Kavitha in தொழிலதிபர்

சென்னையைச் சேர்ந்த இரு நண்பர்கள் தேநீர் விற்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் சாதித்த ஜஹபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோபன் இருவரின் வெற்றிப்பயணம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜஹபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோபன் என்பவர்கள் சென்னையில் பல்வேறு சுவைகளில் சூடாக வழங்கப்படும் தேநீர், நொறுக்கு தீனிகள் விற்றபதில் பிரபல்யமடைந்தவர்கள்.

சாதிக் ஒரு வங்கி காசாளரின் மகனாவர். இவர் சிறுவனாக இருக்கும் போது அவரது தந்தை கேபிள் டெலிவிஷன் தொழிலில் ஈடுபட்டதை நேரில் பார்த்து அவர் தந்தை தொழிலில் நஷ்டம் அடைந்ததையும் கண்டிப்பதை பார்த்து சாதிக் நண்பரின் தொழில் யோசனைகுறித்து சந்தேகத்துடனே இருந்தார்.

வங்கி மேலாளரின் மகனான சடகோபன்தான் முதலில் தொழில் தொடங்குவது பற்றி தமது நண்பர் சாதிக் உடன் கூறியுள்ளார்.

சாதிக் ஐ.டி நிறுவனத்தில் பார்த்து வந்த வேலையை விட்டு விலகி தொழில் தொடங்கும் செயலில் முதலில் குதித்தார்.

ஜெபிஎஸ் வென்ஞ்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த தொழிலில் சடகோபன் சின்ன பங்குதாரர்.

2012-ம் ஆண்டு இந்த நிறுவனம், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு (ITES) பணிகளுடன் ஓர் அழகு நிலையம், சங்கிலித்தொடர் துரித உணவு நிறுவனம் உள்ளிட்ட சில பிராண்ட்களை பிரான்ஞ்சைஸ் எடுத்தது.

தற்போது 42 வயதாகும் சடகோபனை விடவும், சாதிக் இரண்டு வயது இளையவர். ஏறக்குறைய பத்தரை ஆண்டுகள் ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு (ITES) பணிகளில் , கிழக்கு முதல் மேற்கு வரை பல்வேறு நாடுகளில் பரவியிருந்த நிறுவனங்களில் பல்வேறு மனிதர்களை நிர்வகித்தவர்கள்.

இருவரும், வடசென்னையில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் பி.இ முடித்தனர்.

2002-ம் ஆண்டு ஒரே நிறுவனத்தில் பணியாற்றியபோதுதான் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாதிக் ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது சடகோபன் அங்கே சேர்ந்து ஏழு ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

இதன்போது சாதிக் இன்னொரு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றபோதும், இருவரும் தொடர்பில் இருந்தனர்.

ஜெபிஎஸ் வென்ஞ்சர்ஸ் நன்றாகப் போய்க் கொண்டிருந்தபோது, சடகோபன் வேலையில் இருந்து விலகி, சாதிக் உடன் இணைந்தார்

அவர்கள் ஒருமுறை டெல்லிக்கு பயணம் சென்றிருந்தபோது, சொந்தமாக ஒரு பிராண்ட்டை முன்னெடுத்துத் தொழிலில் ஈடுபடுவது என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியது.

அந்தவகையில் சாய் கிங்ஸ் அக்டோபர் 2016-ல் முதல் கடை கீழ்ப்பாக்கத்தில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 350 சதுரஅடி-யில் திறக்கப்பட்டது.

மேலும் நான்கு கடைகள், ஒவ்வொன்றும் சராசரியாக 400 சதுரஅடியில் மத்திய சென்னையின் ஆடம்பரமான இடங்களில் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் 6 மாதத்துக்குள் திறக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.

ஒரு கோப்பை தேநீர் ரூ.20 என தொடக்க விலை இருந்தது. நகரின் தேநீர் ஆர்வலர்கள் மத்தியில் தேநீர் சுவை என்று தனித்து அறியும் வகையில் இருந்தால் சாய் கிங்ஸ் இடம் பிடித்தது.

இவர்களது கடையில் தேநீர் பல்வேறு வகைகளில் இஞ்சி முதல் செம்பருத்தி தேநீர் வரையும், ஹைதராபாத் சுலைமானி தேநீர் முதல் கேரளாவின் தம் தேநீர் வரையிலும் பல்வேறு மூலிகை தேநீர் வகைகளும் கிடைத்தன.

அதுமட்டுமின்றி இங்கு நொறுக்குத் தீனிகளானநூடுல் சமோசா முதல் சான்ட் விட்ச், குக்கீஸ், இனிப்பு முதல் நூடூல்ஸ் வரையில் சில மில்க் ஷேக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

மேலும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்றும் வழங்கு வகையிலும் இவை அனைத்தும் ஆன்லைனிலும் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டது.

இதனுடன் உணவு விநியோக செயலி நிறுவனங்களுடன் இணைந்தும் செயல்படுகின்றனர்.

சிறப்பாக தயாரிக்கப்பட்ட கார்ட்போர்ட்டு ஃபிளாஸ்க் மூலம் தேநீர் உள்ளிட்ட பானங்களை சூடாக வாடிக்கையாளர்களின் இடங்களுக்குக் கொண்டு சேர்க்கின்றனர்.

இதனை தொடந்து முதல் நான்கு கடைகளில் ஒவ்வொன்றில் இருந்தும் மாதம் தோறும் 7 முதல் 9 லட்சம் ரூபாய் கிடைத்தது.

ஒவ்வொரு கடையிலும் மாதம் தோறும் 35,000 கோப்பைகள் தேநீர் விற்கப்பட்டதால் தென் சென்னையில் தலா 40 லட்சம் ரூபாய் முதலீட்டில் மேலும் மூன்று கடைகளைத் தொடங்கினர்.

நான்கு கடைகளில் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் என இருந்ததுடன், ஏழு கடைகளாக அதிகரித்து 2.3 கோடி ரூபாயாக வருவாய் உயர்ந்தால் மேலும் அவர்கள் 9 கடைகள் தொடங்கி அதன் மூலம் 7.4 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

கடைகளின் ஊழியர் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அவர்கள் தங்களது 17வது கடையை சென்னை மேற்கு மாம்பலத்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கினர்.

டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் உட்பட சாதிக்கின் இரண்டு சகோதரர்களிடம் அவற்றை ஒப்படைத்து விட்டனர். இப்போது அவர்கள் இருவரும் முழுக்க, முழுக்க சாய் கிங்ஸில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்போது 100 கடைகள் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். 2021-ம் ஆண்டுக்குள் மேலும் பல நகரங்களிலும் கடைகளைத் திறப்பது என்று திட்டமிட்டுள்ளனர்.

அதில் பெங்களூரிலும் இதே போல தொடங்கப்பட்ட ஒரு சங்கிலித் தொடர் தேநீர் நிறுவனத்தை கைப்பற்றுவதுடன் அவர்களின், வல்லுநர்களின் உதவியுடன் மெனு தயாரிப்பை முறைப்படுத்துவது குறித்து திட்டமிட்டுள்ளனர்.

அவர்களின் பல்வேறு கடைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு வகையான தேநீர், நொறுக்கு தீனிகள், மில்க் ஷேக் தயாரிப்பதில் நன்றாக பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

10 கடைகள் தொடங்குவதற்காக, 2010-ம் ஆண்டு ஒரு ஏஞ்சல் முதலீட்டாளரிடம் இருந்து 2.1 கோடி ரூபாய் நிதியை இருவரும் பெற்றனர்.

இப்போது மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன், மேலும் சில முதலீட்டாளர்களுடன் பேசி வருகின்றனர்.

அவர்களின் தேநீர் பிராண்ட் சாய் கிங்ஸ் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியுள்ள நிலையில் தேநீர் வியாபாரத்தின் மூலம் அவர்களின் 17 கடைகளில் இருந்து கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் 7.4 கோடி ரூபாய் புரண்டுள்ளது.

இது இவர்களை வெற்றிபாதைக்கு வழிவகுத்த வெற்றி கதை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்