29 வயதில் யார் உதவியும் இன்றி பெரிய கோடீஸ்வரர் ஆனது எப்படி? ரகசியம் வெளியானது

Report Print Raju Raju in தொழிலதிபர்

அமெரிக்காவை சேர்ந்த 29 வயது கோடீஸ்வர தொழிலதிபர் தனது வெற்றியின் ரகசியத்தை தான் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

நாதன் லட்கா என்ற இளைஞருக்கு 29 வயதாகிறது. இவர் மென்பொருள் நிறுவத்தை தொடங்கிய நிலையில் குறுகிய காலத்தில் யாருடைய ஆதரவும் இன்றி தனது சொந்த முயற்சியால் கோடீஸ்வரராகி வியக்க வைத்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் மதிப்பு $10.5 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது மாதத்துக்கு $100,000-க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார் நாதன்.

இந்த இளம் வயதில் எப்படி இவ்வளவு பெரிய சாதனையை அவர் நிகழ்த்தினார் என பலரும் ஆச்சரியம் அடைந்த நிலையில் தனது வெற்றிக்கான ரகசியத்தை எளிமையாக அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

  • ஒரு பணி அல்லது ஒரு திட்டத்தை மட்டுமே ஒரே நேரத்தில் செய்யக்கூடாது, 80 சதவீதம் ஒரு பணியை செய்தால், வேறு பணியின் தொடக்கத்தை 20 சதவீதம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அதிக லாபம் பார்க்கமுடியும்.
  • நமது போட்டியாளர்களை நாம் பின்பற்றுவதில் தவறில்லை, ஏனென்றால் அவர்கள் செய்யும் விடயத்தை அவர்களை விட சிறப்பாக நாம் செய்தால் வெற்றி எளிதாகும்.
  • பொதுவாக இலக்குகளை அமைத்து பணிபுரிவதை நான் விரும்புவதில்லை, ஏனென்றால் குறிப்பிட்ட இலக்கை அடைந்தால் ஒரு திருப்தியோ அல்லது சோர்வோ ஏற்பட்டு விடும். இலக்குகளை அமைக்காவிட்டால் நாம் தொடர்ந்து பயணத்தை தொடரலாம்.

மேலே கூறப்பட்ட விடயங்கள் எல்லாம் தான் என் வெற்றியின் ரகசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்