இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் தான் முதலிடம்!

Report Print Kabilan in தொழிலதிபர்

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.

பிரபல பத்திரிக்கையான போர்ப்ஸ் 2019ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 12வது ஆண்டாக முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் முதலிடத்திலும் இருக்கிறது.

இரண்டாவது இடத்தை உள் கட்டமைப்பு அதிபர் கவுதம் அதானி பிடித்துள்ளார். இவர் 8 இடங்கள் முன்னேறி இந்த இடத்தைப் பிடித்துள்ளார். 3வது இடத்தில் 15.6 பில்லியன் டொலர்களுடன் இந்துஜா சகோதரர்களும், 4வது இடத்தில் 15 பில்லியன் டொலர்களுடன் பல்லோன்ஜி மிஸ்திரியும் உள்ளனர்.

உதய் கோடாக் 5வது இடத்தில் சேர்ந்துள்ளார். அவரது நிகர மதிப்பு 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். மேலும் அவர் முதல் முறையாக 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியல்
  • முகேஷ் அம்பானி
  • கவுதம் அதானி
  • இந்துஜா சகோதரர்கள்
  • பல்லோன்ஜி மிஸ்திரி
  • உதய் கோடக்
  • சிவன் நாடார்
  • ராதாகிஷன் தமானி
  • கோத்ரேஜ் குடும்பம்
  • லட்சுமி மிட்டல்
  • குமார் பிர்லா

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்