108 கிலோ குறைத்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகனா இது! இணையவாசிகளை ஷாக் ஆக்கிய புகைப்படம்

Report Print Santhan in தொழிலதிபர்
1360Shares

உலககோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் அனந்த் அம்பானியின் சமீபத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

நாள்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஆனந்த் அம்பானி அந்நோய்க்காக எடுத்துக்கொண்ட மருத்துவத்தின் காரணமாக உடல் எடை அதிகப்படியாக அதிகரித்து காணப்பட்டார். அதன் பின் 2016-ஆம் ஆண்டு சமூகவலைத்தளங்களை அதிரவைத்தவர் அனந்த் அம்பானி.

ஏனெனில் அவர் தன்னுடைய 21-வது பிறந்தநாளிற்குள் உடல் எடையை முற்றிலும் குறைத்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டார்.

அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்துள்ளார். இதற்காக அவர் பல கடும் முயற்சி மேற்கொண்டார்.

தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அவர், அத்துடன் சேர்த்து யோகா, உடற்பயிற்சிகளை தனது அன்றாடை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளார். மேலும் தனது உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றத்தை கொண்டுவந்த அவர் கொழுப்புசத்து இல்லாத உணவு வகைகளையே உட்கொண்டுள்ளார்.

இந்த உடல் எடை குறைப்பு முற்றிலும் இயற்கை முறையில் எட்டப்பட்டது எனவும் இதனால் அவருக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது என்று கூறப்பட்டது. இதையடுத்து 18 மாதங்களில் 108 கிலோ எடை குறைத்து ஸ்லிம் பாயாக வலம் வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக ஆனந்த் அம்பானி முன்பு போல் இல்லை, அவர் உடல் எடை அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆனந்த் அம்பானி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது பழைய மாதிரி இருந்ததை விட உடல் எடை அதிகரித்து அவர் காணப்பட்டுள்ளார். இதை அங்கிருந்த நபர் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, இதைக் கண்ட இணையவாசிகள் இதை நம்பவே முடியவில்லை? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்