ஹைதரபாத் என்கவுன்டர் பொலிஸ்க்கு பரிசு அறிவித்த தொழில் அதிபர்!

Report Print Abisha in தொழிலதிபர்
511Shares

தெலுங்கான மாநில ஹைதரபாத்தில் என்கவுன்டரில் ஈடுபட்ட பொலிசாருக்கு அரியானா மாநிலத்தில் உள்ள தொழில் அதிபர் 1லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளார்.

தெலுங்கான மாநிலமான ஹைதரபாத்தில், கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட நான்குபேரை கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டம் வெடித்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை குற்றவாளிகளை சம்வத்தை நடித்துகாட்ட அழைத்து சென்றபோது தப்ப முயன்றதாக கூறப்படுகின்றது. இதனால், 4பேரும் சம்பவ இடத்தில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே அரியானா மாநிலம் ஹிசார் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், 'ரா குரூப் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தின் தலைவர் நரேஷ் செல்பார் என்பவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, என்கவுன்டரில் ஈடுபட்ட தெலங்கானா பொலிசார் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். இதனை மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்