சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in தொழிலதிபர்

கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 2014 ஆம் ஆண்டில் பதவியேற்றிருந்தார் சுந்தர் பிச்சை அவர்கள்.

அதனை அடுத்து கூகுளிள் நிறுவனத்தினை அசுர வேகத்தில் வளர்த்தெடுத்த அவர் தற்போது அதன் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் அவரது வருட சம்பளமானது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 120 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கூகுளின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்தபோது அதிகபட்ச வருட சம்பளமாக 650,000 டொலர்களை பெற்றுவந்தார்.

இதேவேளை 2014 ஆம் ஆண்டு கூகுளின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றதிலிருந்து தற்போது பதவி உயர்த்தப்படும் வரையில் 550 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பங்குகளை சுந்தர் பிச்சை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்