முதல் பணக்காரர்... அமேசான் நிறுவனர் வாங்கிய மிகப் பெரிய எஸ்டேட்! விலை என்ன?

Report Print Santhan in தொழிலதிபர்

உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஸோஸ்ன் சொத்து மதிப்பு 110 பில்லியன் டொலராக கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட அமேசான் நிறுவன உரிமையாளரான ஜெப் பெஸோஸ், ஆன்லைன் சந்தையில் புரட்சி செய்து வரும் நிலையில், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இவர் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸ் நகரில் உள்ள வார்னர் எஸ்டேட்டை சுமார் 165 மில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கியுள்ளார். முன்னதாக இதற்கு தொழிலதிபர் மொகுல் டேவிட் கெபென் உரிமையாளராக இருந்தார்.

தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக ஜெப் பெஸோஸ் இதனை வாங்கியுள்ளார். இதன் மூலம் அதிக விலைக்கொடுத்து நிலம் வாங்கிய முதல் பணக்காரர் என்ற சாதனையை ஜெப் பெஸோஸ் படைத்துள்ளார்.

(AFP via Getty Images)

இதற்கு முன்னதாக கடந்த 1960-ஆம் ஆண்டு பாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனர் லாச்லன் முர்டோச் தி பெவர்லி ஹில் பில்லீஸ் நிகழ்ச்சி நடத்துவதற்காக 150 மில்லியன் டொலர் விலை கொடுத்து பெல் ஏர் எஸ்டேட்டை வாங்கியிருந்தார்.

இதன் மூலம் அதிக விலைக்கொடுத்து எஸ்டேட் வாங்கிய பணக்காரராக அறியப்பட்ட நிலையில், தற்போது அவரின் சாதனையை முறியடித்து ஜெப் பெஸோஸ் அந்த இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jeff Bezos’ new crib (Google Maps)

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்