8,500 ரூபாய் சம்பாதிக்க 8வருடங்கள் எடுத்துக்கொண்ட நபர்! இன்று கோடிகளில் புரளும் சாதனை தொழிலதிபராக.. வெற்றிக் கதை

Report Print Abisha in தொழிலதிபர்

வாழ்க்கையில், மிக பெரிய கஷ்டங்களை கடந்து பிரியாணி விற்பனை மூலம் வெற்றி பெற்ற சேலம் ஆர்.ஆர் பிரியாணி உரிமையாளரின் கதை குறித்து பார்க்கலாம்.

சேலம் ஆர்.ஆர்.பிரியாணியின் உரிமையாளர் தமிழ் செல்வன். இவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது தாயை இழந்தார். இதனால், நான்காம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை.

எனவே படிப்பை நிறுத்தி விட்டு டீ டம்பளர் கழுவும் வேலைக்கு சென்றுள்ளார். இப்படி ஆரம்பித்த அவரது வாழ்க்கையில் 8,500 ரூபாய் சம்பாதிக்க 8வருடங்கள் தேவைபட்டுள்ளது.

டீ டம்பளர் கழுவும் வேலையில் சொந்தகள் முன்னிலையில் செய்யும்போது அவமானமாக உணர்ந்துள்ளார் தமிழ் செல்வன். எனவே 13வயதில் சென்னைக்கு வேலைக்காக வந்துள்ளார். பசியும் பட்டினியும் வாட்டியுள்ளது. ஒரு நாள் பசி மயக்கத்தில், சாலையில் மயங்கி விழுந்துள்ளார்.

அதன்பின் தள்ளுவண்டியில் வேலையை தொடங்கிய அவர், பாத்திரம் கழுவும் பணியை செய்து வந்துள்ளார். அதில், பயன்படுத்தும் கெமிக்கலால் கால்களில் உள்ள விரல்கள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின் இந்த வேலையை செய்யக்கூடாதென்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே 14ஆயிரம் செலவில், தள்ளுவண்டி கடை ஒன்று வைத்துள்ளார். வித்தியாசமான உணவு வழங்க வேண்டும் என்று பாஸ்மதி அரிசி வாங்கி அதில், பிரியாணி வைத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் மக்கள் வருகை குறைவான இருந்த நிலையில், பின் சுவையும், மணமும் பலரை கட்டியிழுந்துள்ளது.

அதன் பின் வியாபாரம் நன்கு பெருகியுள்ளது. தற்போது 23 கடைகள், 19 வீடுகள், 7 கார்கள் என்று அசுர வளர்ச்சியடைந்துள்ளார். வாழ்க்கையில் எதை இழந்தாரோ அதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் தனது பயணத்தை முன்நிறுத்தி அதில் வெற்றி கண்டுள்ளார்.

தற்போது, சேலம் ஆர்.ஆரில், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியானி, தந்தூரி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, மற்றும் சைனீஷ் ஐயிட்டங்களும் கிடைக்கும். இது தவிர தந்தூரி ஐட்டங்களான பட்டர் நான், நான், கார்லிக் நான், ஜிஞ்சர் நான், தந்தூரி பரோட்டா, இது தவிர நாட்டுக் கோழி பிரியாணி, பிரான் பிரியாணி, பிஷ் பிரியாணி, இது தவிர வெஜ் மற்றும் நான் வெஜ் சூப் வகைகளும் கிடைக்கும். இங்கு சைவ உணவுகளும் கிடைத்தாலும், அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு இது சரியான உணவகம் என்றே கூறலாம்.

மேலும், தற்போது சினிமா துறையிலும் பயணிக்கு தமிழ் செல்வன் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி போராடும் ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers