கொரோனா தொற்று தாக்கத்தால் மிகப்பெரிய முதலீட்டாளர் எடுத்துள்ள அதிரடி முடிவு! இது மிகப்பெரிய இழப்பு

Report Print Abisha in தொழிலதிபர்

மிகப்பெரும் பணக்காரரான வாரன் பபெட், Berkshire Hathaway பங்குகளான, நான்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்களை விற்பதாக அறிவித்துள்ளார்.

பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட ஆண்டு இறுதி கூட்டத்தில், வாரன் பபெட் “உலகம் கொரோனாவால் முற்றிலும் மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஏர்லைனில் முதலீடு செய்வது முற்றிலும் தவறான முடிவாக மாறிவிட்டது.

வாரன் பபெட் இதுபற்றி அறிவித்த சில மணி நேரத்திற்கு பின், Berkshire Hathaway தனது பங்குகளில், $50bn இழந்துவிட்டதாக அறிவித்ததாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தில், டெல்ட்ட ஏர்லைன் 11 சதவீதம் பங்குகளும், அமெரிக்கன் ஏல்லைன்ஸில் 10 சதவீத பங்குகளும், யுனிடெட் ஏர்லைன்சில் 9 சதவீத பங்குகளும், தென்மேற்கு ஏர்லைன்ஸில் 10 சதவீத பங்குகளும் உள்ளதாக ஆண்டு இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Berkshire Hathaway நிறுவனம் பல ஆண்டுகளாக விமான துறையில் தனது முதலீடுகளை தவிர்த்து வந்தது. இந்நிலையில், 2016ஆம் ஆண்டு முதல் மீண்டும் முதலீடு செய்ய துவங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்