யார் உலகின் முதல் டிரில்லியனர்? முகேஷ் அம்பானி எப்போது... ஆய்வு முடிவு

Report Print Abisha in தொழிலதிபர்

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றின் வேளையில், யார் முதல் டிரில்லியனர் என்பது குறித்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது பொருளாதாரம் முற்றிலும் முடங்கிபோய் உள்ளது. இந்நிலையில், ஒர் ஆய்வறிக்கை வெளி வந்துள்ளது. அது யார் எப்போது டிரில்லியனர் ஆவார்கள் என்பது பற்றி கணக்கிடப்பட்டுள்ளது.

ஜெஃப் பெசோஸ்

அதன்படி, அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் 2026ம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராகக் கூடும் என்றும், அப்போது அவருக்கு 62 வயது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், அவர் சமீபத்தில் விவாகரத்து ஆனபோது முன்னாள் மனைவிக்கு 38 பில்லியன் டொலர்கள் வழங்கினார். ஆனாலும், அவர் உலகின் பணக்காரர் பட்டியலில் இருந்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவரது நிகர சொத்து மதிப்பு 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

மார்க் ஜூக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பெசோஸை விட, கிட்டதட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகே டிரில்லியனர் இடத்தினை பிடிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜூக்கர்பெர்கின் தற்போதைய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, அவரின் 51 வயதில் தான் டிரில்லியன் டொலர் மதிப்பினை அடைவார் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி

இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியோ, 2033ம் ஆண்டில், அதாவது அவரது 75 வயதின்போதே டிரில்லியன் டொலர் மதிப்பினை அடைவார் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சீனர்கள்

சீனாவின் ரியல் எஸ்டேட் அதிபர் சூ ஜியாயின் பெசோஸைப் 2027ல் உலகின் இரண்டாவது டிரில்லியனராக மாறுவார் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான அலிபாபாவின் ஜாக்மா 2030ம் ஆண்டில் ஒரு டிரில்லியனராக மாறக்கூடும். அப்போது அவரின் வயது 65 ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் பகுப்பாய்வு செய்த 25 நபர்களில், 11 பேருக்கு மட்டுமே, அவர்களது வாழ் நாளில் டிரில்லியனர் ஆக வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது அவர்களது சமீபத்திய செல்வ வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்