உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்த பிரபலம்! யார் அவர் தெரியுமா?

Report Print Santhan in தொழிலதிபர்

உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்திய கோடீஸ்வரர் அம்பானியை பின்னுக்கு தள்ளி டெஸ்லா நிறுவன எலான் மாஸ்க் முன்னேறியுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவாரான முகேஷ் அம்பானியின், ஜியோவின் பங்குகளை பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் 1,15,693.95 கோடி ரூபாய்க்கு வாங்கின.

இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன.

இதன் காரணமாக அம்பானி சொத்த மதிப்பு 28 பில்லியன் டொலர் உயர்ந்து, மொத்தம் 64.5 பில்லியன் டொலர் ஆனது.

இந்திய மதிப்பில் இது 4.9 லட்சம் கோடி ஆகும். இதனை அடுத்து அந்த நேரத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்தார்.

அதிக முதலீடுகள் மூலம் லாபம் ஈட்டிய அம்பானி உலகின் தலை சிறந்த முதலீட்டாளரும் மில்லியனுருமான வாரன் பபெட்டை பின்னுக்குத் தள்ளினார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரகள் பட்டியலின்படி, அம்பானி 68.3 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் 8-வது இடத்திலும், 67.8 பில்லியன் டொலருடன் வாரன் பபெட் 9-வது இடத்திலும் இருந்தனர்.

7-வது இடத்தில் கூகுளின் சர்ஜே பிரின் இருந்தார். ஆனால் தற்போது, இந்த 3 பேரையும் பின்னுக்குத் தள்ளி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

70.5 பில்லியன் டொலருடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார் எலான். இதனால் அம்பானி 9 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த மாதம் எட்டாவது இடத்தில் இருந்த வாரன் பபெட் 2.9 பில்லியன் டொலரை அறக்கட்டளைக்கு கொடுத்ததால் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்