மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Report Print Fathima Fathima in தொழிலதிபர்
110Shares

பேஸ்புக்கின் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 மில்லியன் டொலர்களை கடந்துள்ளது.

உலகில் முன்னணி சமூகவலைத்தளமாக திகழ்கிறது பேஸ்புக், சமீபத்தில் இதன் பங்கு மதிப்பு 6.5 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், இதன் உரிமையாளர்களில் ஒருவரான மார்க்கின் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.

அதாவது நடப்பு ஆண்டில் மட்டும் பேஸ்புக்கின் மதிப்பு 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது, எனவே மார்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலர்களை கடந்துள்ளது.

அதாவது உலக பணக்காரர்களின் பட்டியலில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சுக்கு அடுத்தபடியாக மார்க் இணைந்துள்ளார்.

இத்தகவலை ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்