வசந்த் & கோ...உயிரிழந்த வசந்தகுமாரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரே கூறிய தகவல்

Report Print Santhan in தொழிலதிபர்

தமிழகத்தில் உயிரிழந்த வசந்தகுமாரின் சொத்து மதிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது 412 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்த்தீஸ்வரம் கிராமத்தில், 1950-ஆம் ஆண்டு ஹரிகிருஷ்ண பெருமாள்-தங்கம்மை என்ற தம்பதிக்கு H.வசந்தகுமார் மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.

அந்த ஐந்து சகோதரர்களில் குமரி ஆனந்தும் ஒருவர், இவர் வேறு யாருமில்லை, தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜனின் தந்தை ஆவார்.

இதனால் வசந்தகுமார் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சித்தப்பா முறை ஆகும். வசந்தகுமார் பொறுத்தவரை அவருடைய உழைப்பு தான் இந்தளவிற்கு மிகப் பெரிய தொழிலதிபரானார் என்றே கூறலாம்.

தொழிலதிபர் மட்டுமின்றி, நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சியில் தனக்கென்று தனி செல்வாக்கு கொண்டவர். கட்சியில் இருந்தால் தான் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றில்லாமல், தன்னால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்து வந்தார்.

இதுவே அவரை கடந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தற்கு காரணம், கன்னியாகுமரி மக்கள் வசந்தகுமார் மீது அந்தளவிற்கு நம்பிக்கை வைத்திருந்தனர்.

அதன் படி கடந்த 2019-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வசந்தகுமார் நின்றார்.

அப்போது, இவர் வேட்பு மனு தாக்கலின் போது, இவரது மொத்த சொத்து 412 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாய் ஆக தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடத்தில் மட்டும் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இவரின் அசையும் சொத்து 230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாய் என்றும், அசையா சொத்து 182 கோடியே 25 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் 412 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாய் ஆகும் என தெரிவித்துள்ளார்.

வசந்தகுமாரின் கடன் மதிப்பு மட்டும், 154 கோடியே 75 லட்சத்து 11 ஆயிரத்து 439 கோடி ரூபாய் என்றும் இதில் அரசுக்கு எந்தவிதமான தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013- 14ஆம் ஆண்டில் அவரது வருமானம் 19 கோடியே 87 லட்சமாக இருந்த நிலையில், 2017-18-ல் 28 கோடியே 93 லட்சமாக, அதாவது 45.59 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும், வசந்தகுமாரும் அவரது மனைவியும், வசந்த் & கோ மீடியா பிரைவேட் லிமிடேட் பங்குதாரராக இருந்து வந்தனர். இதைபோல், அவர் வசந்த் என்ற சாட்டிலைட் தொலைக்காட்சியும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்