அப்பாவின் வசந்த & கோ வா? அரசியலா? உயிரிழந்த வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் எடுத்த முக்கிய முடிவு!

Report Print Santhan in தொழிலதிபர்
2154Shares

தமிழகத்தில் மறைந்த வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் தன் தந்தை கவனித்து வந்த தொழில் சாம்ராஜ்யத்தில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த வசந்தகுமாரின் உடல், அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரியின் அகஸ்தீஸ்வரத்தில், அடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமாரின் 16-ஆம் நாள் காரியத்துக்காக கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ள விஜய்வசந்தை கட்சியினரும், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர்.

அவர்களிடத்தில் பேசும் விஜய் வசந்த், தம்மை பொறுத்தவரை முதலில் தொழில் பிறகு தான் அரசியல் எனக் கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் வசந்தகுமார் உயிரிழந்ததால், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து, அந்த தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அரசியலா? தொழிலா? என்ற குழப்பத்தில் இருந்து வந்த விஜய் வசந்த் முதலில் தொழிலில் கவனம் செலுத்துவது என்றும் பிறகு அரசியலை பார்த்துக்கொள்ளலாம் எனவும் முடிவெடுத்திருக்கிறார்.

தமிழகம், கேரளா, என 70-க்கும் மேற்பட்ட வசந்த் அன் கோ ஷோரூம்கள் உள்ள நிலையில் அவற்றின் கணக்கு வழக்குகளை முழுநேரமாக கவனித்து தனது தந்தை கட்டமைத்த தொழில் சாம்ராஜ்யத்தை இன்னும் பரவலாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறாராம்.

வசந்தகுமார் உயிருடன் இருந்தபோது தமது இரண்டு மகன்களுக்கும் அவர் அடிக்கடி கூறிய அறிவுரைகள், தொழில் இருந்தால் தான் எல்லாம், அது இல்லை என்றால் யாரும் மதிக்கமாட்டார்கள், அதனால் தொழில் மீதான கவனத்தை சிதறவிடாதீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்