உலகப் பணக்காரர் வரிசையில் இரண்டாவது இடத்தையும் இழந்தார் பில்கேட்ஸ்

Report Print Givitharan Givitharan in தொழிலதிபர்
503Shares

சில வருடங்களுக்கு முன்னர்வரை உலகின் முதலாவது பணக்காரராக திகழ்ந்தவர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில்கேட்ஸ்.

அதன் பின்னர் அமேஷான் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Jeff Bezos பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார்.

இதன் காரணமாக பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார்.

எனினும் தற்போது எலன் மொஸ்க் பில்கேட்ஸை மேலும் பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார்.

இதனால் பில்கேட்ஸ் மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றார்.

டெஸ்லா எனப்படும் இலத்திரனியல் கார்களை வடிவமைக்கும் நிறுவனத்தினை நடாத்திவரும் எலன் மொஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளி ஓடங்களை அனுப்பும் சேவையையும் நடாத்தி வருகின்றார்.

இவரது நிறுவனம் இதுவரை 300,000 வரையான இலத்திரனியல் கார்களை வடிவமைத்து விற்பனை செய்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே இந்த வருட ஆரம்பத்தில் உலகப் பணக்காரர் வரிசையில் 35வது இடத்திலிருந்து அவர் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதாவது இவ் வருட ஆரம்பத்தில் 7.2 பில்லியன் டொலர்கள் சொத்தினைக் கொண்டிருந்த அவர் தற்போது 127.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்தினை கொண்டுள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்