ஆசிய வர்த்தகத்தில் யூரோவின் பெறுமதி அதிகரிப்பு

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
ஆசிய வர்த்தகத்தில் யூரோவின் பெறுமதி அதிகரிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவுகளை தொடர்ந்து ஆசிய வர்த்தகத்தில் அமெரிக்க டொலர்களிலும் பார்க்க யூரோவின் பெறுமதி அதிகரிப்பை காட்டியுள்ளது.

டோக்கியோ பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்று யூரோ நாணயம் ஒன்றின் பெறுமதி 1.0937 டொலர்களாக 2 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதத்தின் பின்னர் யூரோவின் பெறுமதி இம்மாதமே அதிகரிப்பை காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவுகளின் பிரகாரம் மிதமான வலதுசாரியான இமானுவல் மக்ரோன் 23.7சதவீத வாக்குகளையும், அதிதீவிர வலதுசாரி தலைவர் மரைன் லு பென் 21.7சதவீத வாக்குகளையும் பெற்று தெரிவாகி உள்ளதோடு, இவர்கள் இருவரும் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்க உள்ளனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments