உலகில் உள்ள 196 நாடுகளுக்கும் தனியாக பயணித்து சாதனை படைத்த வாலிபர்

Report Print Peterson Peterson in ஐரோப்பா
உலகில் உள்ள 196 நாடுகளுக்கும் தனியாக பயணித்து சாதனை படைத்த வாலிபர்

உலகில் உள்ள 196 நாடுகளுக்கும் வாலிபர் ஒருவர் தனியாக பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் வாழும் இந்த பூமியில் 196 நாடுகளும், 132 நாடுகள் அல்லாத பிரதேசங்களும் உள்ளன.

இவை அனைத்தையும் இளம் வாலிபர் ஒருவர் சுற்றி வர முடியுமா? என்ற கேள்விக்கு டென்மார்க் நாட்டை சேர்ந்த 28 வயதான ஹென்ரிக் ஜப்பென்சென் என்பவர் பதிலளித்துள்ளார்.

சுற்றுலா பிரியரான இவர் உலகில் உள்ள ஒட்டுமொத்த நாடுகளையும் பிரதேசங்களையும் இளம் வயதில் தனி ஒருவராக பயணம் செய்தவர் என்ற சாதனையை புரிய வேண்டும் என தீர்மானித்து கடந்த 2009ம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கினார்.

அதாவது, தனக்கு 22 வயது இருக்கும்போது அவர் இந்த பயணத்தை தொடங்கி 28 வயது தொடங்கியபோது எரித்திரியா நாட்டில் தனது பயணத்தை கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் திகதி நிறைவு செய்துள்ளார்.

இந்த சாதனைக்கு 100 நாடுகளிலிருந்து இவருக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. எனினும், பயணம் முழுக்க இவர் குறைவான கட்டணம் உள்ள விமானங்களில் மட்டுமே பறந்துள்ளார்.

இந்த 7 ஆண்டுகளில் உலகம் முழுவதும் உள்ள 1,000 ஹொட்டல்களில் தங்கியுள்ளார். 200 விமானங்களில் 850 முறை பயணம் செய்துள்ளார்.

ஏமன் நாட்டில் பயணம் செய்தபோது தான் இவரது சாதனை தொடர்பான செய்திகள் பிரபலம் ஆக தொடங்கின.

எரித்திரியாவில் தனது சாதனை பயணத்தை நிறைவுப்படுத்திய வாலிபர், உலகளவில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியலையும் தயாரித்துள்ளார்.

இவரது பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டா.

இதற்கு அடுத்தடுத்த 9 இடங்களில் பூட்டான், நமீபியா, துருக்மினிஸ்தான், வட கொரியா, வானவ்து, ஏமன், ஈரான், டொமினிக்கோ மற்றும் ஃபரோல் தீவுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளையும் இளம் வயதில் பயணம் செய்து சாதனை படைத்துள்ள இவர், அடுத்ததாக 132 பிரதேசங்களுக்கும்(Territories) தனியாளாக பயணம் செய்யும் ஏற்பாடுகளில் தற்போது மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments