பிரித்தானியா விரைவாக விலக வேண்டும்: ஐரோப்பியா வலியுறுத்தல்

Report Print Basu in ஐரோப்பா
பிரித்தானியா விரைவாக விலக வேண்டும்: ஐரோப்பியா வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியம் - பிரித்தானியா இடையிலான பிரிவு சுமுகமானதாக இருக்காது என்றாலும், அது விரைவாக நிகழ விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜான்-கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஜேர்மன் வானொலியில் கூறியதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்த பின்னரும் அதன் செயலாக்கத்தை அக்டோபர் மாதம் வரை பிரித்தானியா தள்ளி வைத்துள்ளது ஏன் என்று புரியவில்லை.

இந்தப் பிரிவினை சுமுகமானதாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும், அது அதிக வலியை ஏற்படுத்தாமல் மிகத் துரிதமாக நிகழ்ந்து விட வேண்டும் என்பதே என் விருப்பம்.

"பிரெக்ஸிட்'டுக்கு ஆதரவாக பிரித்தானியா மக்கள் வாக்களித்த நாள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், பிரித்தானியாவிற்கும மிக மோசமான நாள் என ஜான்-கிளாட் கூறியுள்ளார்.

பொது வாக்குகெடுப்பு முடிவுகள் வெளியானதையடுத்து, பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் வரும் அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பொறுப்பேற்கவிருக்கும் புதிய பிரதமர், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது நினைவுக்கூரதக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments