ஒரு தாயின் பாசப்போராட்டம்: பாம்பை வீழ்த்திய எலி

Report Print Deepthi Deepthi in ஐரோப்பா
ஒரு தாயின் பாசப்போராட்டம்: பாம்பை வீழ்த்திய எலி

குட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத்துடன் சண்டையிட்டு இறுதியில் வெற்றியும் பெற்றுள்ளது.

தாய் அன்பு கலப்படம் இல்லாதது, அது எந்த தீங்கையும் தனது குட்டியை அண்ட விடாது, இது மனித இனத்திற்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொறுந்தும் என்பதை மெய்ப்பிக்கும் சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது.

இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலை ஒன்றில், தாய் எலியுடன் சென்ற குட்டி எலியை, ஒரு பாம்பு தனது வாயில் கவ்விக்கொண்டு வேகமாக சென்றுள்ளது, தாய் எலி சற்றும் மனம் தளராமல் பாம்பை துரத்தி சென்று பாம்பின் வாலினை சரமாரியாக கடித்து குதறியுள்ளது

எலியின் கடியை தாங்க முடியாத பாம்பு, குட்டி எலியை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதருக்குள் ஒடியது, அதன்பிறகும் தாய் எலியின் ஆவேசம் அடங்கவில்லை, புதருக்குள் அந்த பாம்பை விரட்டி சென்றது.

சில நிமிடங்களுக்கு பிறகு பாம்பை வீழ்த்திய பெருமிதத்துடன் தாய் எலி, குட்டி எலியை நோக்கி ஒடிவருகிறது.

அதுவரை அசைவின்றி கிடந்த குட்டி எலி தனது தாயை கண்டவுடன் துள்ளிக்குதித்து செல்கிறது, ஒரு தாயின் பாசப்போராட்டத்தை விளக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments