ரோமின் பாரம்பரிய நீரூற்றில் நீச்சல் உடையில் குளித்த இளம் பெண்கள்: பாடம் புகட்டிய மக்கள்

Report Print Basu in ஐரோப்பா

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள 400 ஆண்டு பாரம்பரிய the Fontana dell'Acqua Paola என்ற வரலாற்று நீரூற்றில், இளம் பெண்கள் நீச்சல் உடையில் குளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட the Fontana dell'Acqua Paola, ரோம் மக்களின் நேசத்துக்குரிய கட்டடக்கலை வரலாற்று தளமாக திகழ்ந்து வருகின்றது.

அநேகமாக சுற்றுலா பயணிகள் என கூறப்படும் பெண்கள், ரோம் நகரத்தின் வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்ள the Fontana dell'Acqua Paola வின் குளிர்ந்த தண்ணீரில், நீச்சல் உடையில் குளித்து விளையாடிவுள்ளனர்.

குறித்த வரலாற்று நீரூற்றில் குதிப்பவர்களுக்கு 200 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்பது விதி. ஆனால் இது அப்பெண்களுக்கு தெரியாது என கூறப்படுகிறது.

நிகழ்வின் போது அவ்வழியாக வந்த அப்பகுதி வசி ஒருவர், பெண்கள் விதியை மீறி குளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார், மேலும் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்பெண்களின் செயல் ஒரு மதிப்பிற்குரிய பாரம்பரிய தளத்தை அலட்சியப் படுத்துகின்ற வகையில் உள்ளது என ரோம் வசிகள் தங்களின் சீற்றத்தை வெளிபடுத்தியுள்ளனர்.

மேலும், புகழ்பெற்ற நீரூற்றை நீச்சல் குளம் என கருதியே குளித்ததாக அப்பெண்கள் தெரிவித்துள்ளனர், ஆனால் அவர்களின் கருத்துடன் தங்களுக்கு உடன்பாடு இல்லை என ரோம் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments