ஐரோப்பிய நாடுகளில் உள்ள அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதோ விரிவான பட்டியல்

Report Print Peterson Peterson in ஐரோப்பா

புகலிடம் மற்றும் வேலைக்காக ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் வெளிநாட்டினர்கள் பற்றிய விரிவான ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

2015ம் ஆண்டு வரை உள்நாட்டு யுத்தம் காரணமாக புகலிடம் கோரியும் மற்றும் பணிக்காகவும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 37.7 மில்லியன் வெளிநாட்டினர்கள் ஆகும்.

அதாவது, ஐரோப்பிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8 சதவிகிதம் வெளிநாட்டினர்கள் ஆகும்.

ஐரோப்பிய நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வசித்து வரும் பிற நாட்டினர்களின் தரவரிசை பட்டியல் இதோ !

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 24.2 சதவிகிதம் ஆகும். இவர்களில் இத்தாலி நாட்டினர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

 1. இத்தாலி
 2. ஜேர்மனி
 3. போர்ச்சுகல்
 4. பிரான்ஸ்
 5. ஸ்பெயின்
 6. பிற ஐரோப்பிய மற்றும் EFTA* நாடுகள்
 7. செர்பியா
 8. ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகள்
ஆஸ்திரியா

ஆஸ்திரியாவில் உள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 13.2 சதவிகிதம் ஆகும்.

 1. ஜேர்மனி
 2. ரோமானியா
 3. குரோஷியா
 4. பிற ஐரோப்பிய மற்றும் EFTA நாடுகள்
 5. துருக்கி
 6. செர்பியா
 7. போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவினா
 8. ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகள்
ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 9.6 சதவிகிதம் ஆகும்.

 1. ரோமானியா
 2. பிரித்தானியா
 3. இத்தாலி
 4. பிற ஐரோப்பிய மற்றும் EFTA நாடுகள்
 5. மொராக்கோ
 6. ஈகுவேடார்
 7. சீனா
 8. ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகள்
ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 9.3 சதவிகிதம் ஆகும்.

 1. போலந்து
 2. இத்தாலி
 3. ரோமானியா
 4. கிரீஸ்
 5. குரோஷியா
 6. பிற ஐரோப்பிய மற்றும் EFTA நாடுகள்
 7. துருக்கி
 8. ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகள்
பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 8.4 சதவிகிதம் ஆகும்.

 1. போலந்து
 2. ஐயர்லாந்து
 3. ரோமானியா
 4. போர்ச்சுகல்
 5. பிற ஐரோப்பிய மற்றும் EFTA நாடுகள்
 6. இந்தியா
 7. பாகிஸ்தான்
 8. ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகள்
இத்தாலி

இத்தாலி நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 8.2 சதவிகிதம் ஆகும்.

 1. ரோமானியா
 2. பிற ஐரோப்பிய மற்றும் EFTA நாடுகள்
 3. அல்பேனியா
 4. மொராக்கோ
 5. சீனா
 6. உக்ரைன்
 7. பிலிப்பைன்ஸ்
 8. ஐரோப்பிய நாடுகளை தவிர்த்து பிற நாடுகள்
போர்ச்சுகல்

போர்ச்சுகல் நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 3.8 சதவிகிதம் ஆகும்.

 1. ரோமானியா
 2. பிற ஐரோப்பிய மற்றும் EFTA நாடுகள்
 3. பிரேசில்
 4. கேப் வெர்டி
 5. உக்ரைன்
 6. சீனா
 7. அங்கோலா
 8. ஐரோப்பிய நாடுகள் தவிர்த்து பிற நாடுகள்
ரோமானியா

ரோமானியா நாட்டில் உள்ள வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 0.4 சதவிகிதம் ஆகும்.

 1. இத்தாலி
 2. பிற ஐரோப்பிய மற்றும் EFTA நாடுகள்
 3. ஐரோப்பிய நாடுகள் தவிர்த்து பிற நாடுகள்.

இந்த பட்டியலில் *EFTA நாடுகள் என்பது சுவிட்சர்லாந்து, Liechtenstein, நோர்வே, ஐஸ்லாந்து போன்ற European Free Trade Association(EFTA) அமைப்பை சேர்ந்த நாடுகள் ஆகும்.

மேலும், பிரான்ஸ், கிரீஸ், ஹங்கேரி, சைப்ரஸ், போலந்து உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள வெளிநாட்டினர்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பதால் அந்நாடுகள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments