ஐரோப்பிய நாடுகளில் இது சட்டப்படி குற்றமாகும்

Report Print Peterson Peterson in ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதி இன்றி பணி புரியும் வெளிநாட்டினர்கள் எதிர்க்கொள்ளும் சட்ட சிக்கல்கள் பற்றிய விரிவான தகவல்களை பார்ப்போம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பணி செய்ய விரும்பும் ஒரு வெளிநாட்டினர்(ஐரோப்பிய ஒன்றியத்தை சேராதவர்) அதற்கான முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதி பெற்றிருப்பது மிக முக்கியமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 27 நாடுகளில் 24 நாடுகள்(டென்மார்க், ஐயர்லாந்து மற்றும் பிரித்தானிய தவிர்த்து) ஒரே மாதிரியான சட்டவிதிகள் பின்பற்றப்படுகின்றன.

அனுமதியின்றி பணி செய்தால் ஏற்படும் அபாயம்

தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதி இல்லாமல் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பணி செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.

எனினும், அவராக வெளியேறவில்லை என்றால் சட்டப்படி அவரை நாடுகடத்த அரசால் முடியும்.

மேலும், அனுமதி இல்லாத நபர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேசமயம், நபர் பணி செய்யும் சூழல் மற்றும் அவருடைய உண்மை தகவல்கள் அடிப்படையில் அவருக்கு தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும், கடுமையான குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் நாடுகடத்தப்படுவதுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் திரும்ப அனுமதிக்க முடியாது சூழலும் ஏற்படும்.

பணி வழங்கும் நிறுவனத்திற்கு ஆபத்து ஏற்படுமா?

அனுமதி இல்லாத நபர்களை பணியில் அமர்த்தியது நிரூபிக்கப்பட்டால் நிறுவனத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் எத்தனை நபர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார்களின் அடிப்படையில் தண்டனையின் கடுமையும் அதிகரிக்கும்.

நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்படுமா?

ஆமாம். நபர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் செய்யும் குற்றங்கள்

  • சட்டவிரோதமாக நிறுவனத்தை நடத்துவது அல்லது அனுமதி இல்லாத நபர்களை தொடர்ந்து பணியில் அமர்த்துவது
  • சட்டவிரோதமான பணியானது அனுமதி இல்லாத நபர்களை மிக அதிகளவில் பணியில் சேர்த்துக்கொள்வது.
  • பணி புரியம் நிறுவனத்தின் மோசமான சூழல்
  • ஒருவர் சட்டவிரோதமாக தான் கொண்டு வரப்பட்டுள்ளார் என தெரிந்தும் அவருக்கு பணி வழங்குவது
  • பணிபுரியும் நபர் குறிப்பிட்ட வயதிற்கு கீழ் இருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம்.
ஒருவருக்கு அனுமதி வழங்கவில்லை என்பது தெரியாமல் ஒரு நிறுவனம் அவரை பணியில் அமர்த்தினால்?

ஒருவரை பணிக்கு தெரிவு செய்வதற்கு முன்னதாகவே அவரை பற்றி சட்டப்பூர்வமான ஆவணங்களை அந்நிறுவனம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பணிக்கு அனுமதிக்கப்படும் நபர் அந்த தகவலை தேசிய வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற முறையான சட்டங்களை பின்பற்றி ஒருவருக்கு வேலை வழங்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.

சட்டபூர்வ அனுமதிக்காவிட்டாலும் ஒருவருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் என்ன?

சட்டவிரோதமாக ஒருவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பணி செய்வது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவருக்கு சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.

  • நிறுவனத்தில் நிலுவையில் உள்ள ஊதியத்தை நிறுவனம் அவருக்கு உடனடியாக கொடுக்க வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் ஊதியமான அவர் பணி செய்த நேரத்தை அடிப்படையாக கொண்டு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கான தொகையாக இருக்கும்.
  • ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டாலும், அவர் பணிபுரிந்த நிறுவனம் அவருக்கு முழு தொகையையும் வழங்கிவிட்டதா என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • ஒருவேளை, ஒருவர் ஊதியத்தை பெறாமல் நாட்டை விட்டு வெளியேறி விட்டால், அவருக்கு சேரவேண்டிய தொகை மற்றும் அவருடைய நாட்டிற்கு அனுப்பி வைக்க செலவாகும் கட்டணம் என அனைத்தையும் அவருக்கு பணி வழங்கிய நிறுவனம் ஏற்கவேண்டும்.
  • ஒருவருக்கு சேரவேண்டிய ஊதியம் கிடைக்கவில்லை என்றால் அவர் சட்டப்பூர்வமாக நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கலாம். இதனை அவர் நேரடியாகவும் அல்லது உள்ளூர் தொழிலாளர் சங்கத்துடனும் இணைந்தும் இப்புகார்களை பதிவு செய்து உரிமைகளை பெறலாம்.
அனுமதி இல்லாத ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர் மீண்டும் அதே நாட்டிலேயே வசிக்க வழி உள்ளதா?

ஒருவரை பணிக்கு அமர்த்திய நிறுவனம் அவரை தவறாக பயன்படுத்தியிருந்தால் அல்லது சட்டவிரோதமாக குறைந்த வயதில் கடத்தப்பட்ட கொண்டு வந்திருந்தால் அதே நாட்டிலேயே தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று வசிக்கும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments