ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு வதிவிட கட்டணம்: ஸ்கொட்லாந்து உறுதி

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு வதிவிட கட்டணம்: ஸ்கொட்லாந்து உறுதி
106Shares
106Shares
lankasrimarket.com

ஸ்கொட்லாந்து பொதுத் துறையில் பணியாற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கான வதிவிட கட்டணத்தை வழங்குவதற்கு ஸ்கொட்லாந்து முதல்வர் Nicola Sturgeon முன்வந்துள்ளார்.

தனது பிரெக்சிற் எதிர்ப்பு சான்றுகளை வலுப்படுத்தும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் மாநாட்டை கிளாஸ்கோவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இவ் உறுதிமொழியானது, பிரெக்சிற்றின் பின்னர் தங்களது பிரித்தானிய குடியிருப்பை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஸ்கொட்லாந்து வைத்தியசாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் 20 ஆயிரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்களை பாதுகாக்கும் வகையிலானது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்