பிரெக்சிற் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் திட்டம் இல்லை: பிரித்தானியா அமைச்சர்

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
பிரெக்சிற் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் திட்டம் இல்லை: பிரித்தானியா அமைச்சர்

பிரெக்சிற் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையிலிருந்து தாம் விலகும் திட்டம் இல்லை என, பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்கான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுன்றத்தில் நடைபெற்ற பிரெக்சிற் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது அவர் மேலும் உரையாற்றியபோது, ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, சிறிதளவு முன்னேற்றம் ஏற்படுமென்று நாம் நம்புகின்றோம். எனவே, பிரெக்சிற் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் திட்டம் எமக்கில்லை’ என்றார்.

நாடாளுமன்றத்தில் பிரெக்சிற் விவாதத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சிலர், ‘பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் இரு தரப்பினர்களும் உடன்பாடொன்றை எட்டாவிடின், பேச்சுவார்த்தை முடிவுக்கு வரலாமென்று தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே, பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்