ஐரோப்பாவில் விஷ வாயு தாக்குதல் நடத்த வாய்ப்பு: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in ஐரோப்பா

ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் விஷ வாயு தாக்குதலுக்கு ஐ.எஸ் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதலை ரயில் நிலையம், சுரங்க பாதைகள், விமானம் உள்ளிட்டவைகளில் நடத்த ஐ.எஸ் ஆதரவாளர்கள் பாரிய திட்டமொன்றை தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பு கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், குறித்த அமைப்பின் ஆதரவாளர்கள் ஐரோப்பா முழுமையும் உயிரியல் ஆயுதங்களால் தாக்குதலுக்கு திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் பயன்படுத்தும் ரயில் மற்றும் விமான சேவைகளிலும் சுற்றுலாபயணிகள் குவியும் பிரதேசங்களிலும் இந்த தாக்குதல் இருக்கலாம் என ஜேர்மனியின் பிரபல பத்திரிகை ஒன்று எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உளவுத்துறையினர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறித்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பாவில் பல நகரங்களிலும் தொடர்ந்து கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், ரசாயன தாக்குதலும் நடைபெறும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பல நாடுகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கடந்த யூலை மாதம் விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட ரசாயன தாக்குதல் முறியடிக்கப்பட்ட நிலையில், விசாரணையில் குறித்த தகவலானது வெளியாகியுள்ளது.

இதன் எதிரொலியாக ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து பொலிசார் பயிற்சிகள் அளித்துள்ளனர்.

பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவர் தங்கள் நாடு எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பின்னர் பெர்லினில் மாநகர பொலிசார் குறித்த பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்