ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கு பலர் கவலை – ஆய்வில் தகவல்

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில், பிரித்தானியப் பிரஜைகளில் பெருமளவானோர் கவலையடைந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேறுவது தொடர்பில் ஏற்கெனவே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது, இதற்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியப் பிரஜைகளில் பெருமளவானோர் வாக்களித்திருந்தனர். இருப்பினும், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு பெருமளவானோர் கவலையடைந்துள்ளதாக கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்ட ஆய்வில் ஈடுபடும் YouGov எனும் சர்வதேச இணைய அடிப்படையிலான சந்தை ஆராய்ச்சி நிலையம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பிலேயே, இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அந்நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடத்தப்பட்ட பிரெக்சிற் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு தவறான முடிவை எடுத்துள்ளதாக 47 சதவீதமானோர் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக சரியான முடிவை எடுத்துள்ளதாக 42 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் கவலையடைவோரில், 18 சதவீதமானோர் இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 14 சதவீதமானோர் பிரெக்சிற் விவகாரத்தை அரசாங்கம் முற்றுமுழுதாகக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்