மத்திய ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல்: ஆறு பேர் பலி

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
158Shares
158Shares
ibctamil.com

மத்திய ஐரோப்பாவை தாக்கி வரும் Herwart புயலுக்கு இதுவரையிலும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜேர்மனி, போலந்து மற்றும் செக்குடியரசுகளில் தற்போது மிக மோசமான காலநிலை நிலவி வருவதுடன், மணிக்கு 112 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

கடுமையான மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

ஜேர்மனியின் கரையோரப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவரும், மேலும் நான்கு பேர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்துள்ளனர்.

செக் குடியரசுகளில் மணிக்கு 180 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசியுள்ளது, ஆயிரக்கணக்கான மக்கள் இன்னுமம் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர்.

ஜேர்மனியில் நிலவரம்

ஜேர்மன் தீவான Langeoog-ல் 225 மீற்றர் நீளம் கொண்ட Glory Amsterdam என்ற கார்கோ கப்பல் தடைப்பட்டு நின்றுள்ளது.

கப்பலில் இருந்து எண்ணெய் கசிகிறதா என அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர், கப்பலில் உள்ள 22 பேரும் பாதுகாப்புடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பெர்லின் தீயணைப்பு நிர்வாகம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது, நேற்று மட்டும் மூன்று மணிநேரத்தில் 100க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வந்துள்ளன.

ஹம்பெர்க் மாகாண மீன் மார்க்கெட் வெள்ளத்தில் மிதப்பதுடன், சாலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன, ரயில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்