பணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாறுகிறதா ஐரோப்பா?

Report Print Balamanuvelan in ஐரோப்பா
392Shares
392Shares
lankasrimarket.com

ஐரோப்பிய யூனியனின் விசா விதிமுறைகள், ஐரோப்பாவை பணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாற்றும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Transparency International, மற்றும் Organised Crime and the Corruption Reporting Project என்னும் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில், ஐரோப்பிய யூனியனின் விசா விதிமுறைகள் எளிதில் ஏமாற்றத்தக்கவையாக உள்ளதாகவும்,

இதனால் வசதி படைத்த குற்றவாளிகள் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்குள் வந்து மறைந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியா உட்பட்ட 13 நாடுகளின் “Golden Visa” விதிமுறைகள் எளிதில் ஏமாற்றப்படத்தக்கவையாக உள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனால் பெரிதும் லாபமடைந்தவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் புடினின் உறவினர்களும் Angolaவின் கோடீஸ்வரர்களும் முன்னணியில் இருக்கின்றனர்.

இதையடுத்து Cyprus, Malta, Portugal, Hungary ஆகியவை லாபமடைபவர்கள் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிக்கின்றன.

“Golden Visa” திட்டம், ஒரு பெரிய தொகையை ஐரோப்பாவில் முதலீடு செய்யும் கோடீஸ்வரர்களுக்கு வாழும் உரிமையும் சொல்லப்போனால் குடியுரிமையும்கூட வழங்கும் ஒரு திட்டமாகும்.

இத்திட்டம் 220,000 பவுண்டுகள் முதல் 9 மில்லியன் பவுண்டுகள் வரை முதலீடு செய்பவர்களுக்கு விசா அளிப்பதோடு Schengen எல்லையற்ற மண்டலத்தில் எங்கு வேண்டுமென்றாலும் வாழும் உரிமையையும் எளிதில் அமெரிக்கா செல்லும் வழிவகையையும்ஏற்படுத்திக் கொடுக்கிறது.

Transparency International அமைப்பைச் சேர்ந்த Casey Kelso கூறும்போது, “இது பணக்காரக் குற்றவாளிகள் தங்கள் பாவக்காசைக் கொண்டுவந்து Austria, Cyprus அல்லது Malta போன்ற நாடுகளில் ஒளிந்து கொள்வதைக் குறித்தது அல்ல.

இது மொத்த ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பைக் குறித்தது” என்கிறார். ”குற்றத்தையும் ஊழலையும் நம் வீட்டுக்குள் நாமே அழைத்து வருவது போன்றது இது”என்று அவர் மேலும் கூறினார்.

குடியுரிமை போன்ற விடயங்கள் ஒரு நாடு ஒரு தனி நபருக்கு வழங்கும் விலை மதிக்க முடியாத சொத்துக்களைப் போன்றவை, ஆனால் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் அவற்றை அளிப்பதற்கு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை சொதனை செய்யும் அளவிற்குகூட சோதனை செய்வதில்லை.

இப்படியே போனால் தங்கள் நாடுகளில் குற்றமிழைத்து விட்டு தப்பி வரும் பணக்காரக் குற்றவாளிகளின் புகலிடமாகவே ஐரோப்பா மாறிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்