கிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் பனி: மக்கள் அச்சம்

Report Print Balamanuvelan in ஐரோப்பா

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யா, பல்கேரியா, உக்ரைன், Romania மற்றும் Moldova ஆகிய பகுதிகளில் பனி ஆரஞ்சு நிறத்தில் காணப்பட்டதால் மக்கள் குழப்பத்திற்குள்ளாயினர்.

பலர் அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். செவ்வாய்க்கிரகத்தில் பனிச்சறுக்கு செய்வதுபோல் உள்ளது என்று ஒருவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இன்னொருவர் மஞ்சள் நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் பனி பெய்கிறது. மக்கள் பயந்து போயிருக்கிறார்கள் என்று ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

வானிலை ஆய்வாளர்கள் மக்களின் குழப்பத்தைப் போக்கும்வகையில் இந்நிகழ்வுக்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

இம்மாதிரியான நிகழ்வு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வது சகஜம்தான் என்றும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த வாரம் வட ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்தில் ஒரு பெரிய மணல் புயல் வீசியது.

அது மழை மற்றும் பனியுடன் கலந்து வெண்ணிற மணலை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறமாக மாற்றியது.

பலத்த காற்றுகள் அந்த மணல் கலவையை கிழக்கு ஐரோப்பாவுக்குள் அடித்து வந்ததால் அது இங்குள்ள பனியை ஆரஞ்சு நிறமாக்கியது.

ஒருவர் இந்த ஆரஞ்சு நிற பின்னணியை Blade Runner 2049 என்னும் சினிமாவில் வரும் ஒரு காட்சியுடன் ஒப்பிட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்