தேனீக்களை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை: ஐரோப்பிய நாடுகள் முடிவு

Report Print Balamanuvelan in ஐரோப்பா

ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் neonicotinoid வகை பூச்சிக்கொல்லிகள் தேனீக்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து தேனீக்களின் எண்ணிக்கையை பாதிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

தேனீக்கள் உணவு சேகரித்துவிட்டு மீண்டும் தங்கள் கூட்டிற்கு திரும்பிச் சென்று பெருகுவதை தடை செய்யும் திறன் கொண்ட, Oil seed rape போன்ற பயிர்கள்மீது தெளிக்கப்படும் மூன்று குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பசுமை இல்லங்கள் தவிர மற்ற இடங்களில் அதாவது திறந்தவெளியில் இந்த குறிப்பிட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்யுமாறு ஐரோப்பிய கமிஷன் முன்வைத்த திட்ட அறிக்கையில் உறுப்பு நாடுகள் தற்போது கையொப்பமிட்டுள்ளன.

ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் மூன்று வகையான தேனீக்களுக்கு இந்த பூச்சிக்கொல்லிகள் ஆபத்தை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் எண்ணியிருந்ததைப் போலல்லாமல் neonicotinoid வகை பூச்சிக்கொல்லிகள் தேனீக்கள் மற்றும் இதர மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் மீதும் நமது சுற்றுச்சூழலின்மீதும் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து தற்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் நமக்கு நன்கு விளங்கச் செய்துள்ளன.

இந்த தடை விவசாயிகள் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தைக் குறித்து நன்கறிந்துள்ள நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் புதிய விவசாய திட்டம் ஒன்றை உருவாக்கும் நேரத்தில் மாற்று மருந்துகளையும் கண்டறிய முயலுவோம் என்று சுற்றுச்சூழல் துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...