காட்டு விலங்கோடு உயிருக்கு போராடிய பெண்மணி: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Trinity in ஐரோப்பா

ஜார்ஜியா நாட்டை சார்ந்த பெண்ணொருவர் ஆக்ரோஷமான காட்டு பூனை ஒன்றால் தாக்கப்பட்டார்.

ஆனாலும் அதன் தாக்குதலில் இருந்து தடுக்க வெறும் கைகளாலாலேயே பல நேரம் போராடி பின் அந்த மிருகத்தை கொன்றும் விட்டார்.

கடந்த 7ஆம் தேதி வியாழன் அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

46 வயது பாட்டியான டிடி பிலிப் எனும் பெண்மணிக்கு எப்பொழுதும் தனது ட்ரக் ஒன்றின் மீது தீரா பிரியம். ஏதாவது ஒரு வேலை செய்து ட்ரக்கை நவீன படுத்தி கொண்டே இருப்பது அவரது வழக்கம்.

சம்பவம் நடந்த அன்றும் பிலிப் தனது ட்ரக்கை தயார் செய்து வைத்து விட்டு அதன் பின் அதில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார். அந்த ஸ்டிக்கரை தனது கணவரிடம் காட்டுவதற்காக புகைப்படம் எடுக்க வெளியே வந்திருக்கிறார்.

அப்போது மாலை மணி 6 இருக்கலாம் என்று அந்த சம்பவத்தை நினைவு கூறுகிறார் பிலிப்.

நான் எனது கைபேசியை எடுத்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தேன். அப்போது என் பக்கத்துக்கு வீட்டு நாய் குறைத்து கொண்டிருந்தது. வீட்டை விட்டு வெளியே வரும்போது கருப்பு நிறத்தில் பூனை மாதிரியான காட்டு விலங்கு ஒன்றை பார்த்தேன். விளையாட்டாக அதையும் போட்டோ எடுத்தேன்.

அதன் பின் வெளியே ட்ரக் முன்பு வருவதற்குள் அந்த மிருகம் என் முகத்தின் அருகில் இருந்தது . அது ஒரு பாப் காட்டு பூனை. நிலைமை மோசமானதை உணர்ந்து கொண்டேன். கத்துவதற்கு முன் உள்ளே என் ஐந்து வயது பேத்தி இருப்பது பற்றி யோசித்தேன். எனக்கு இப்போது ஒரே வழிதான் இருந்தது ஆகவே கண்ணிமைக்கும் நேரத்தில் என் மீது பாய்ந்த அந்த விலங்கின் கழுத்தை மிகச்சரியாக பிடித்து கொண்டேன்.

அந்த மிருகம் அதன் விரல்களால் என்னை பிராண்டியது. அப்போதும் பயப்படாமல் அதன் கழுத்தை இறுக்கினேன். இன்று நான் இறக்க கூடாது என சபதம் எடுத்து கொண்டேன்.

ஆகவே போராட்டம் பயங்கரமாக இருந்தது. மருமகளிடம் 911ற்கு அழைக்கும்படி கத்தினேன். அதன் பின் நானும் பாப் பூனையும் போராடியதில் பாப் பூனை இறந்து விட்டது. எனக்கு பல இடங்களில் அதன் பல் தடங்கல் பதிந்தால் ரத்த காயங்கள் ஏற்பட்டது.

என்று தனக்கு நடந்த அந்த பயங்கர சம்பவத்தை விவரித்தார் பிலிப்.

சம்பவத்தன்று உடனடியாக அவரது மகனும் அந்த ஆக்ரோஷமான பூனையை கொல்ல துப்பாக்கியோடு வந்திருக்கிறார். ஆனால் அதற்குள் ஜார்ஜியாவே தனது கைகளால் போராடி அதனை கொன்றிருக்கிறார்.

அதன் பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் பிலிப். நிறைய பல் கடித்த காயங்கள் மற்றும் கீறல்களுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சையால் ஓரளவு குணமாகி இருக்கிறார். இப்போது அவருக்கு ரேபிஸ் வகையான ஊசிகள் ஒவ்வொன்றாக போடப்பட்டு வருகிறது.

அதற்கு 10000 டாலர்கள் செலவாகலாம் என்கிற நிலையில் தற்போது fundy.com எனும் இணையதளத்தின் மூலம் அந்த குடும்பம் நன்கொடையை நாடி இருக்கிறது.

ஆக்ரோஷமான காட்டு விலங்கை வெறும் கைகளையே ஆயுதமாக கொண்டு தைரியமாக கொன்ற இந்த 46 வயது பெண்மணியை இப்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த ட்ரக்கில் அவர் ஒட்டியிருந்த வாசகம் என்னவென்றால் வித்தியாசமான பெண்கள் வரலாற்றை உருவாக்குவார்கள் ('Women who behave rarely make history) என்பதுதான்!

அதற்கேற்றார்போல வரலாற்றை உருவாக்கி விட்டார் இந்த 46 வயது பெண்மனி டிடி பிலிப்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers