கடலில் குளித்த புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த துயரம்: எதிர்பாராமல் நடந்த அதிசயம்

Report Print Basu in ஐரோப்பா

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிய நபரை, நீச்சல் வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மகனிணி காப்பாற்றி அசத்தியுள்ளார்.

45 வயதான பெனெடெட்டோ தனது காதலனை இரண்டு நாட்களுக்கு முன்பு காக்லியாரியில் நடந்த விழாவில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், புதுமண தம்பதிகள் காக்லியாரிக்கு கிழக்கே காலா சின்ஜியாஸ் கடலில், மிதக்கும் பலூன் போன்ற சாதனத்தை பிடித்த படி மிதந்துள்ளனர். திடீரென 45 வயதான பெனெடெட்டோ நீரில் மூழ்கியுள்ளார்.

தண்ணீர் எதிர்பார்த்ததை விட குளிர்ச்சியாக இருந்ததால், பெனெடெட்டோவால் நகர முடியாமல் போயுள்ளது. மேலும், பலூனும் காற்றில் அடித்துச் சென்றுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அங்கிருந்த வர்களிடம் உதவி செய்யுமாறு கதறியுள்ளனர்.

நல்ல நேரமாக சம்பவயிடத்தில் இத்தாலியின் முன்னாள் நீச்சல் உலக சாம்பியன் மகனிணி இருந்துள்ளார். கதறலை கேட்டு உடனே கடலில் குதித்த மகனிணி, பெனெடேட்டோவை நீரில் மூழ்காமல், அவரை தலையை பிடித்து காப்பாற்றியுள்ளார்.

இதனையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் விரைந்து பெனேடேட்டோவை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர், பெனேடேட்டோ இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

சம்பவம் குறித்து பேசிய முன்னாள் ஒலிம்பிக நீச்சல் வீரர் மகனிணி, நான் எனது கடமையை தான் செய்தேன் என தெரிவித்துள்ளார். குணமடைந்த பெனெடெட்டோ, என் உயிரை காப்பாற்றியது நீச்சல் வீரர் மகனிணி என இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் தான் தெரியும். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்