அடுத்த பத்து ஆண்டுகளில் ஒருவருக்கு மரணம் ஏற்படுமா?: கண்டுபிடிக்க உதவும் புதிய பரிசோதனை!

Report Print Balamanuvelan in ஐரோப்பா

நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அடுத்த பத்து ஆண்டுகளில் ஒருவருக்கு மரணம் ஏற்படுமா என்பதைக் கண்டறிய உதவும் புதிய பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மரணம் குறித்த சோதனை முறைகளில் இவ்வகையான சோதனைகளில், இது முதல் பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐரோப்பிய வம்சாவளியினரான 18 முதல் 109 வயது வரையுள்ள 44,168 பேரிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றில் 12 விதமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுகள் தொடர்ந்தன.

இந்த காலகட்டத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 5,512 பேர் இறந்து போனார்கள்.

இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் இரத்தத்தில் காணப்பட்ட 226 உட்பொருட்களின் அளவுகள் கணக்கிடப்பட்டு ஒப்பிடப்பட்டன.

அவற்றின் அடிப்படையில் ஒருவர் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் மரணமடைய வாய்ப்புள்ளதா என்பது கணக்கிடப்படுகிறது.

சரி, இப்படி ஒரு சோதனை வெற்றிபெற்று நடைமுறைக்கு வந்தால் யாருக்கு லாபம்? லாபம் இருக்கத்தான் செய்கிறது!

நாம் வேண்டுமானால், எனது மரணம் ஏற்படும் நேரத்தை அறிந்து கொள்ள விரும்பவில்லை என்று கூறலாம்.

ஆனால் நமது வங்கி அதை தெரிந்து கொள்ள விரும்பலாம், உங்களுக்கு கடன் கொடுக்க விரும்புபவர்கள் அதை தெரிந்து கொள்ள விரும்பலாம், ஏன், மருத்துவ கல்வியிலோ அல்லது விமானியாக பயிற்சி பெற செல்லும்போதோ கூட கல்வி நிறுவனங்கள் அதை தெரிந்து கொள்ள விரும்பலாம் என்கிறார் bioethicistஆன Arthur Caplan என்பவர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்