ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாற்றப்படும்...! ஆஸ்திரியா அறிவிப்பு

Report Print Abisha in ஐரோப்பா

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளது.

ஹாலோகாஸ்ட் என்ற நடிவடிக்கை மூலம் பல லட்சம் யூதர்களை கொன்ற ஹிட்லர் உலக முழுவதும் யாராலும் மறக்க முடியாத நபராக இருந்து வருகிறார்.

ஆஸ்திரியாவின் ப்ரனவ் ஆம் இன் எனும் நகரிலுள்ள 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீட்டில், ஹிட்லர் தனது வாழ்வில் முதல் சில வாரங்கள் மட்டும் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் அரசுக்கும் நடந்த மிக நீண்ட சட்டப்போராட்டத்தின் முடிவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் இந்த வீட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தடுக்கும் வகையில், இந்த கட்டடத்துக்கு வாடகை கொடுத்து பாதுகாத்து வந்த அரசாங்கம், இதே இடத்தில் அகதிகளுக்கான மறுவாழ்வு மையம் அமைப்பதற்கும், மொத்தமாக விலை கொடுத்து வாங்குவதற்கும், செப்பனிடுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளை அந்த கட்டடத்தின் உரிமையாளர் தவிர்த்து வந்தார்.

Getty image

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் இந்த இல்லத்தை 8,10,000 யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.

அதன் பிறகு, இந்த கட்டடத்தை இடித்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது இதை காவல்நிலையமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்