நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருடன் ஐரோப்பா சென்ற படகு கவிழ்ந்து விபத்து!

Report Print Vijay Amburore in ஐரோப்பா

ஐரோப்பாவிற்கு 100க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருடன் சென்ற படகு புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்ததில்குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கு நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலிய தீவான லம்பேடுசா அருகே சென்றுகொண்டிருக்கும் போது, புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை நடந்த விபத்தைத் தொடர்ந்து, 13 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 149 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் 12க்கும் அதிகமானவர்களை இன்னும் காணவில்லை என்று இத்தாலிய கடலோர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐந்து பெண்களின் உடல்கள் மட்டும் ஐரோப்பிய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, படகு 160 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு முந்தைய நாள் லிபியாவிலிருந்து புறப்பட்டிருந்துள்ளது. மோசமான புயலின் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஸ்பெயினின் தன்னார்வ தொண்டு நிறுவனமான ப்ரோக்டிவா ஓபன் ஆர்ம்ஸ் தனது ட்விட்டரில், அதிகாலையில் படகில் போராடிய 73 புலம்பெயர்ந்தோரை மீட்டதாகவும், அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் உறைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.

அவர்களில் சிலரின் உடல்களில் துப்பாக்கிசூட்டு காயங்கள் இருப்பதாகவும், சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்