கிறிஸ்மஸ் கொண்டத்திற்கு உருவாக்கப்பட்ட அலங்காரம்... பறிப்போனது 2வயது சிறுவனின் உயிர்!

Report Print Abisha in ஐரோப்பா

கிறிஸ்மஸ் சந்தையில் வைத்திருந்த பனி சிற்பம் உடைந்து விழுந்ததில் 2வயது சிறுவன் பலியாகினான்.

உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. இதற்கு பல நாடுகளில் சிறப்பு சந்தைகளும் அலக்கார பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஐரோப்பா நாடான Luxembourg-ல் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தை உருவாக்கப்பட்டு, அதில் பனி சிற்பம் உள்ளிட்ட பல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மாலை வேளையில், பலர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த நேரத்தில் பனி சிற்பத்தின் அருகில் நின்று கொண்டிருந்த குழந்தையின் மீது அது சரிந்து விழுந்தது.

5நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், குழந்தைக்கு முதலுதவி அளித்தனர். எனினும் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.

இதனை தொடர்ந்து அந்த பனி சிற்பத்தை உருவாக்கிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கலைஞர் Samuel Girault-யிடம் பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்