வரலாற்றில் முதன்முறையாக வித்தியாசமான முறையில் போதைப்பொருள் கடத்தல்: பொறி வைத்துப் பிடித்த பொலிசார்!

Report Print Balamanuvelan in ஐரோப்பா

வரலாற்றில் முதல் முறையாக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் ஏராளமான போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அந்த கப்பலை பொறிவைத்து பிடித்தனர்.

கொலம்பியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு ஒரு நீர்மூழ்கிக்கப்பல் வருவதாக போர்ச்சுகல் பொலிசார் ஸ்பெயின் பொலிசாருக்கு துப்பு கொடுத்துள்ளனர்.

7,690 மைல் தொலைவைக் கடந்து அந்த நீர்மூழ்கி ஸ்பெயினிலுள்ள கலிசியா என்ற இடத்துக்கு வரும்வரை அதை ட்ராக் செய்த பொலிசார், அமைதியாக அதை கண்காணித்தவண்ணம் இருந்துள்ளனர்.

கலிசியாவுக்கு வந்ததும் ஸ்பெயின் பொலிசார் அந்த கப்பலை கைப்பற்றினர். அந்த நீர்மூழ்கியை இயக்கிய மூவரில் ஈக்வடாரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீன் இல்லாமல் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவர் தப்பியோடிவிட்டார்.

65 அடி நீளம் கொண்ட அந்த கப்பலை செய்யவே சுமார் 2.7 மில்லியன் டொலர்கள் ஆகியிருக்கும் என்பதால், இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரிய ஒரு போதைக்கும்பல் இருக்கும் என பொலிசார் கருதுகிறார்கள்.

அந்த நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து 121 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் பகுதியின் குறுக்கே வட அமெரிக்க நாடு ஒன்றிலிருந்து ஐரோப்பாவிற்கு இப்படி நீர்மூழ்கிக் கப்பலில் போதைப்பொருள் கடத்துவது வரலாற்றிலேயே இது முதல் முறை என கருதப்படுகிறது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்