சீனாவை மட்டும் மிரட்டி வந்த கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வந்த நிலையில், தற்போது ஒருவர் இத்தாலியில் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி, உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் சீனா உட்பட மொத்தம் 25 நாடுகளுக்கு மேல் பரவி வருவதாக கூறப்பட்டது.
அதில் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் இந்த நோய் பாதிப்பு இருந்தது.
இந்நிலையில் தற்போது இத்தாலியின் Padua-வில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த Adriano Trevisan என்ற 70 வயது நபர் கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்துள்ளார்.

இவர் தான் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த முதல் நபர், இவர் 10 நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று இவருடன் சேர்ந்த அங்கிருக்கும் காபி ஷாப்பில் கார்ட்ஸ் விளையாடிய 67 வயது நபருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் தனியாக வைக்கப்பட்டு மருத்துவர்களால் தீவிரவமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

Adriano Trevisan இறந்த சில மணி நேரங்களில் இத்தாலியில் 78 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து அங்கிருக்கும் Lombardy-யில் 5 மருத்துவர்கள் மற்றும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.