உயரும் கொரோனா பாதிப்பு... அனைத்து பள்ளிகள் மூடப்படும்! 2-வது ஐரோப்பிய நாடு அறிவிப்பு

Report Print Santhan in ஐரோப்பா

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாட்டின் அனைத்து மழலையர் பள்ளி, உயர்நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இரண்டு வாராங்களுக்கு மூடுவதாக டென்மார்க் பிரதமர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐரோப்பாவில் இருந்து வரும் அனைத்து பயணங்களுக்கும் தடைவிதித்துள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக

அனைத்து மழலையர் பள்ளி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Picture: Rex)

இது குறித்து நாட்டின் பிரதமர் Mette Frederiksen புதன் கிழமை மாலை கூறுகையில், முக்கியமான செயல்பாடுகளில் இல்லாத பொதுத்துறை ஊழியர்கள், ஊதியத்துடன் வீட்டிற்கு அனுப்பப்படுவர்.

அதே நேரத்தில் தனியார் துறையில் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

100 அல்லது அதற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளும் உள் அரங்கு நிகழ்வுகள் வரும் திங்கட்கிழமை முதல், கடுமையான நிபந்தனைகள் மற்றும் புதிய நடவடிக்கைகளில் ஒன்றாக தடை செய்யப்படும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கொரோனா வைரஸால் தற்போது வரை டென்மார்க்கில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், ஆ மிகவும் மோசமாக இருக்கும் என்ற காரணத்தினால் தொலை நோக்கு பார்வையுடன் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Picture: AFP)

டென்மார்க்கில் கடந்த புதன்கிழமை 423 பேருக்கு புதித்தாக கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் 1,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசு இப்படி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸின் காரணமாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகள் ஏற்கனவே 20 பில்லியன் டொலர் வரி விலக்குக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக Mette Frederiksen தெரிவித்துள்ளார் .

இந்த கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்த இத்தாலிக்கு பின் இரண்டாவது ஐரோப்பிய நாடாக டென்மார்க் பார்க்கப்படுகிறது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்