கொரோனாவால் தவிக்கும் ஐரோப்பிய நாடு... உதவுவதற்கு பறந்து வந்த சீனா! வெளியான வீடியோ காட்சி

Report Print Santhan in ஐரோப்பா

இத்தாலியில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், சீனாவை சேர்ந்த 9 பேர் கொண்ட நிபுணர்களின் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் மட்டும் அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 189-ல் இருந்து 1016ஆக-ஆக உயர்ந்தது.

தற்போது வரை இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 15,113-ஆக உள்ளது. இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் இத்தாலிக்கு, சீனா தங்கள் நாட்டில் இருக்கும் 9 பேர் கொண்ட நிபுணர்களின் குழுவை அனுப்பி உதவியுள்ளது.

நேற்று நள்ளிரவு சரியாக உள்ளூர் நேரப்படி 22:30 மணிக்கு இந்த குழு தனி விமானம் மூலம் Rome's Fiumicino விமானநிலையத்தில் தரையிறங்கியுள்ளது. நிபுணர்களுடன் ஆயிரம் கிலோ எடை கொண்ட மருத்துவ உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த குழுவைNational Health Commission மற்றும் சீனாவின் Red Cross Society சங்கம் ஏற்பாடு செய்தன. ஈரான் மற்றும் ஈராக்கிற்கு அனுப்பப்பட்ட முந்தைய அணிகளைத் தொடர்ந்து சீன அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பிய மூன்றாவது நிபுணர் குழு இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிபுணர்களின் குழு வியாழக்கிழமை முன்னதாக ஷாங்காயிலிருந்து புறப்பட்டனர், மேலும் குழு உறுப்பினர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அனைவருக்கும் சோதனைகளை மேற்கொண்டதாக ஷாங்காய் நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள் மற்றும் டிபிபிரிலேட்டர்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மற்றும் பொருட்களை அவர்களுடன் எடுத்துச் சென்றனர்.

இந்த குழுவில் வந்த நபர் ஒருவர், 30 ஜோடி கொண்ட ஐசியூ உபகரணங்களை கொண்டு வந்திருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இத்தாலியில் தற்போது நிலவும் நோயின் தாக்கத்திற்கு ஏற்ப இந்த உபகரணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை சீனாவில் மருத்துவ நடைமுறைகளின் போது பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டதாக ஷாங்காய் ஜியாடோங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியின் ருஜின் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இத்தாலிய வெளியுறவு மந்திரி Luigi Di Maio தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், இன்றிரவு இத்தாலி தனியாக இல்லை, உலகில் பலர் எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்.

மேலும் இத்தாலிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் வந்திருக்கும் சீனா நிபுணர்களின் குழுவுக்கு தங்கள் நன்றியை காட்ட விரும்புவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்