ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைத்த கொரோனா! மருத்துவ பொருட்களை கைப்பற்றிய ஜேர்மன்

Report Print Santhan in ஐரோப்பா

சுவிட்சர்லாந்திற்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படவிருந்த மருத்துவ பொருட்களை ஜேர்மனி சுங்கதுறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருகிறது. குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்நிலையில் ஜேர்மனியின் Rhine-Westphalia-வின் Juechen நகரில் இருக்கும், ஒரு விநியோக மையத்தை ஆய்வு செய்த போது, பொது மக்களுக்கான உயர்தர சுவாச முகமூடிகள் மற்றும் பிற பாதுகாப்பு ஆடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக Rheinische Post குறிப்பிட்டுள்ளது.

இது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட 3 எம் நிறுவனம் எனவும், மருத்துவ பொருட்களை சுவிட்சர்லாந்திற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மார்ச் மாத துவக்கத்தில் ஜேர்மனி அத்தகைய பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைகளை விதித்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்படி நடத்தப்பட்ட சோதனையில் மருத்துவப் பொருட்களோடு கொண்ட பல டிரக் லோடுகளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்ததாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பையும், ஒற்றுமையையும் சிதைத்துவிட்டதாக கூறப்படுகிறது, அதில் முதல் படியே ஐரோப்பிய நாடுகள் பல தங்கள் நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன. அதிலும் குறிப்பாக கடுமையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்