கொரோனாவால் முழு குடும்பத்தையும் இழந்த நபர் எடுத்த முடிவு! வைரலாகும் கண்கலங்க வைக்கும் புகைப்படம்

Report Print Santhan in ஐரோப்பா

இத்தாலியில் கொரோனா நோயால் தன்னுடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்த நபர் ஒருவர் மாடியின் உச்சியில் நின்று விழுந்து தற்கொலை செய்து கொண்ட புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

கொரோனா வைரஸால் அதிகம் உயிரிழப்பை சந்தித்த சீனாவை, இத்தாலி முந்திவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில், கொரோனா வைரஸ் தன்னுடைய ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது.

நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாததால், அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது வரை 59,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,476 பேர்(சீனாவில் 3,270 உயிரிழப்பு) உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் காரணமாக பல இறப்புகளைக் கொண்ட மிகப்பெரிய நாடாக இத்தாலி மாறி வருகிறது.

பெரும்பாலான இத்தாலிய குடும்பங்கள் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழ்ந்து தவித்து வருகின்றன.

அந்த வகையில், அங்கிருக்கும் சமூக ஊடகங்களில் நபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட வீடியோ ஒன்று வைரலானது.

இதனால் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில், தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் நெட்லி எனவும், கொரோனா வைரஸ் காரணமாக தன்னுடைய தாய், மனைவி, என தன்னுடைய முழு குடும்பத்தை இழந்ததால், அதன் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...